இந்த வலைப்பதிவில் தேடு
In this post we are providing good stories for children and moral stories to develop good thinking for children and spiritual Spiritual Stories, Comedy Stories, Short Stories, Short Novels, Life Stories, and Thenaliraman Stories, Ambulimama Stories, So in which record are the stories of Vikramaditan Vedalam, 63 Nayanmars stories, 12 Alvars stories, and all God stories? Thanks to parents and teachers to connect their children with good stories for the future of their lives
சிறப்புடையது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பூனையால் உணர்த்திய நீதி
ஒரு நாள் அரச சபையில் குறைகளைச் சொல்ல சிலர் வந்தார்கள். அவர்களை அரசர் அன்போடு அழைத்தார். அவர்கள் மனதில் உள்ள குறைகளைச் சொல்லச் சொன்னார்.
‘அரசே எலிகளின் தொல்லையை எங்களால் பொறுக்க முடியவில்லை என்று ஒருவன் சொன்னான்.
மற்றவர்கள் நெய் பயிர்களையும் நவதானியங்களையும் கடித்துத் தின்று சேதம் விளைவிக்கிறது' என்று சொன்னார்கள். அடுத்தவன் எலிகளை ஒழிததால்தான் எங்கள் வாழ்வுவளமாக இருக்கும். நாங்களும் நிம்மதியாக இருப்போம் என்று சொன்னான்.
எலிகளைப் பற்றி இவர்கள் கூறிய குறைகளைக் கேட்ட தெனாலிராமன் திகைத்தான். அரசர் இதற்கு என்ன முடிவு செய்கிறார் என்று பார்ப்போம் எனச் சிந்தித்துக் கொண்டிருந்தான்
அரசர் குடிமக்களின் குறைகளைக் கேட்டதும் எலிகளால் இவ்வளவு பெரிய துன்பமா? என்று கூறிக் கொண்டே அமைச்சர்களைப் பார்த்தார். 'ஆமாம் அரசே! ஏழைகளின் வாழ்வை எலி
சூறையாடுகின்றன. அவைகளால் பயிர் வகைகள் பாழாகின்
என்று சொன்னார்கள். அரசர் மற்றவர்களைப் பார்த்தார். அனைவரும் அமைச்சரின் கருத்தை ஆமோதித்தார்கள். உடனே அரசர் எலிகளை ஒழிக்க என்ன வழி?' என்று சபையோரைப் பார்த்துக் கேட்டார்
'எலிகளை விஷம் வைத்துக் கொல்லலாம்' என்று ஒருவர் சொன்னா
எலிகளைப் பொறி வைத்துப் பிடிக்கலாம் மற்றொருவர் சொன்னார். என்
அமைச்சர் எழுந்தார் 'அரசே! இவர்கள் சொன்னபடி செய்தால் எலிகளை ஒழிக்க முடியாது. நான் ஒரு யோசனை சொல்கிறேன்' என்று கூறிவிட்டு சபையோரைப் பார்த்தார். அனைவரும் அமைச்சர் என்ன யோசனை சொல்ல
போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள்
எலிகளைப் பிடிக்க வீட்டுக்கொரு பூனையை வளர்க்கக் கொடுக்கலாம் என்று சொன்னா
அமைச்சர் சொன்னதைக் கேட்டதும் அனைவரும் ஆமாம்!" என்று ஆமோதித்தார்கள். சபையோரின் கருத்துக்களின்படி அரசர் ஒவ்வொருவீட்டிற்கும் ஒரு பூனையை வளர்க்கக் கொடுத்தார். அப்பூனைக்குப் பால் ஊற்றி வளர்க்க ஒரு பசுவையும் கொடுத்தார்.
தெனாலிராமன் அரசரின் முடிவைக் கண்டு ஆச்சரியப் பட்டார். எலியை ஒழிக்க பூனை. அந்தப் பூனைக்கு பால் கொடுக்க பசு, இதனால் அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று யோசித்தார். அரசர் இதுபோல் வீண் செலவுகள் செய்வதை நாம் நிறுத்தும்படிச் சொன்னால் நம்மீது கோபப்படுவார். அதனால் பூனையைக் கொண்டே அரசருக்குப் புரியும்படி நீதி சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தார்
அரசர் குடிமக்கள் வீட்டுக்கு. ஒரு பூனையும் பசுவும் வளர்க்கச் சொன்னார். அரண்மனையில் பணி செய்வோர். மற்றவர்களுக்கும் ஒரு பூனையும் பசுவும் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நான் கொண்டு வந்து காட்டச் சொல்லும்போது காட்ட வேண்டும் என்று கட்டளையும் போட்டா
தெனாலிராமனுக்கும் ஒரு பூனையும் பசுவும் கொடுத்தார்கள். அவைகளை வாங்கிக் கொண்டு தெனாலிராமன் வீட்டிற்குச் சென்றார்
குடிமக்கள் அனைவரும் அரசர் கொடுத்த பூனையையும் பசுவையும் கவனித்து வளர்த்தார்கள். பசு கறக்கும் பாலை பூனைக்கு ஊற்றி கொழு கொழு என்று வளர்த்தார்கள்.
அரசர் தான் வளர்க்கும் பூனையைப் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்று இரவு பகலாக பாதுகாத்து வந்தார்கள். அதனால் சிலருக்கு பொருள் இழப்பும் ஏற்பட்டது
தெனாலிராமன் பூனை வளர்ப்போர் செய்யும் வீண் செலவுகளைக் கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தார். தான். வளர்த்த பசு தரும் பாலை ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்தார். பூனைக்கு சூடாகக் காய்ச்சிக் கொடுத்தார் பூனைக்குச் சூடாகக் காய்ச்சிய பாலை வைத்துக் குடிக்க வைத்தா
பூனை ஒவ்வொரு வேளையும் பாலைக் குடிக்க வரும் போதெல்லாம் சூட்டுப்பாலைக் குடித்து அதன் நாக்கு வெந்துவிட்டது.
தெனாலிராமன் பூனை. பாலைப் பார்த்தால் குடிக்காமல் பயந்து ஓடிவிடும் நாளுக்கு நாள் பால் குடிக்காமல் பூனை பசியால் வாடியது. உடல் மெலிந்தது. இறக்கும்நிலைக்கு பூனை வந்துவிட்டது.
அரசர், வளர்ப்பதற்காக கொடுத்த பூனைகளை எடுத்து வந்து காண்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அரசர் ஆணையை மதித்து குடிமக்கள் தாங்கள் வளர்த்து வந்த பூனையைக் கொண்டு வந்து காட்டினார்கள்.
அமைச்சரும் அரசர் பணியாளர்களும் மற்றவர்களும் அவரவர்கள் வளர்த்த பூனையைக் கொண்டு வந்து அரசரிடம் காண்பித்தார்கள்.
தெனாலிராமன் தான் வளர்த்த பூனையைப் பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு வந்து அரசர் முன் படுக்க வைத்தார். அரசர் பட்டுத்துணியை நீக்கிப் பூனையைப் பார்த்தார். பூனை எழுந்து நிற்க முடியாமல் படுத்துக் கொண்டிருந்தது. அந்தப் பூனையைப் பார்த்ததும் அரசருக்குக் கோபம் வந்தது.
தெனாலிராமனைப் பார்த்தார். இராமா! எல்லோர் பூனையும் கொழு கொழு என்றிருக்கிறது. உன் பூனை மட்டும் இறக்கும் நிலையில் ஏன் இருக்கிறது?' என்று கேட்டார்.
'அரசேர் கோபப்படாமல் நான் சொல்வதைக் கேளுங்கள்'
என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்த்தார்.
அமைச்சரும் மற்றவர்களும் தெனாலிராமனுக்கு அரசர் இன்று தகுந்த தண்டனை வழங்கப் போகிறார் என்று நினைத்தார்கள்.
'இராமா! என்ன சொல்லப் போகிறாய்? சொல்' என்று கோபமாக அரசர் கேட்டார்.
'அரசே! என் பூனை பால் குடிப்பதில்லை. பாலைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறது' என்று சொன்னார். 'பாலைக்கண்டால் பூனை ஓட்டம் பிடிக்கிறதா?
சொல்வதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது. பாலைக்குடிக்காத பூனையும் இந்த உலகத்தில் இருக்கிறதா?' என்று கேட்டார்.
'அரசே! என் பூனையைப் பார்த்த பிறகு தங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்' என்று தெனாலிராமன் சொன்னார்
தெனாலிராமன் சொல்வது உண்மையா? பொய்யா? என்று தெரிந்து கொள்ள எல்லோரும் ஆவலோடு காத்திருந்தார்க
அரசர் காவலனை அழைத்தார். பூனைக்கு கொடுக்க பால்
கொண்டு வருமாறு சொன்னார்
காவலன் வெள்ளிக் கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்து பூனையின் முன் வைத்தான். பாலைப் பார்த்ததும் பூனை பயந்து ஓட்டம் பிடித்தது
காவலன் பூனையைப் பிடித்துப் பால் கிண்ணத்தைப் பலமுறை வைத்தான். பூனை பாலைக் கண்டால் பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்தது
கூடியிருந்த அனைவரும் பூனையின் செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்
'அரசே பாலை வெறுக்கிற் பூனையும் இல்லை. குடிகளை வருத்துகிற அரசரும் இல்லை. ஆனால் நாட்டில் பாலின்றி குழந்தைகள் வாடும் போது பூனைக்கு பால கொடுத்து வளர்க்கச் சொன்னீர்கள். அது தவறு என்று சுட்டிக்காட்டவே என் பூனை பாலைக் கண்டால் பயந்து ஓடும்படி வளர்த்தேன். நீங்கள் கொடுத்த பசுவின் பாலைக் குடித்து வளர்ந்த குழந்தை இதோ' என்று காட்டினார்
அரசருக்குத் தெனாலிராமன் மீது இருந்த கோபம் மறைந்தது. பூனைக்குக் கொடுத்த பாலை தெனாலிராமன் போல் ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்திருநதால் ஏழைகள் மகிழ்ந்திருப்பார்கள். மக்களின் வாழ்த்தும் கிடைத்திருக்கும் என்று நினைத்தார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபலமான இடுகைகள்
ஞானிக்கு பாடம் சொன்ன இராமன்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக