முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

இடங்கழி நாயனார்

 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...

ஞானிக்கு பாடம் சொன்ன இராமன்!

ஞானிக்கு பாடம் சொன்ன  இராமன்!




#thenali raman story in tamil

தெனாலிராமன் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயரிடம் பணியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தெனாலிராமனை 'விகடகவி' என்று பலரும் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.




அரசர் தெனாலிராமன் அறிவைப்பற்றி நன்கு அறிந்தவர். அதனால் தனக்கு ஏற்படும் சந்தேசங்களை இராமனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.




ஒரு நாள் அரசரைக் காண ஞானியார் ஒருவர். வரப்போகிறார் என்ற செய்தி அரண்மனை முழுவதும் பரவியது. ஞானியாரை வரவேற்க அரண்மனையில் ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அரசர் மனதில் ஒருவரை ஞானி என்று சொல்வதன் பொருள் என்ன? எதற்காக அவரை ஞானி என்று அழைக்கிறார்கள்? என்று கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு யாரைக் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என்று யோசித்தார்.




தெனாலிராமன் அரண்மனையின் வேலைகளைக் கவனித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார். அரசர் எதிரே வந்தார். தெனாலிராமன் அவரை வணங்கினார். அரசர் தெனாலி ராமனைப் பார்த்தார். 


இராமா! இன்று என்னைப் பார்க்க ஞானியார் ஒருவர் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்.




'தெரியும்' என்று ஒரே வார்த்தையில் தெனாலிராமன் சொன்னார்.




அவரை வரவேற்க தாங்கள் இருக்க வேண்டாமா?' என்று கேட்டார். 'அரசே! ஞானியார் தங்களைக் காண வருகிறார். அவரை நான் எப்படி வரவேற்பது வரவேற்க பணியாட்கள் இருக்கிறார்கள்"


என்று சொன்னார்.



இராமா! எனக்கு ஒரு சந்தேகம். அதை நீ தீர்த்து வைக்க வேண்டும்" என்று சொன்னார்.




சந்தேகத்தைச் சொல்லுங்கள். தீர்த்து வைக்கிறேன்" என்று சொன்னார். 'ஞானி என்றால் என்ன அர்த்தம், யாரை ஞானி என்று அழைக்கலாம்' என்று கேட்டார்.




'ஞானி என்றால் அருள் ஞானம் பெற்றவர் என்று பொருள். முற்றும் துறந்த துறவி என்று பொருள். இறைவளின் அருளைப் பெற்றவர் என்றும் சொல்லலாம். இந்த உலகப் பற்றற்றவரை துறவி என்று அழைக்கலாம்' என்று சொன்னார்.




தெனாலிராமன் சொன்ன விளக்கம் அரசருக்கு மனதில் நிம்மதியைக் கொடுத்தது. தன் சந்தேகம் தீர்ந்து விட்டது என்று நினைத்தார். 'இராமா! இன்று ஞாகளியாரை வரவேற்க நீயும் அரண்மனையில் இருக்க வேண்டும்' என்று அரசர் சொன்னார்.




அரசே! தங்கள் ஆணைப்படி நான் ஞானியை வரவேற்க தங்களுடன் இருக்கிறேன்' என்று சொன்னார்.




ஞானியர் அரண்மனைக்குள் வந்தார்! அவரை வரவேற்க அரண்மனைப் பணியாட்கள் சென்றார்கள். ஞானியார் மீது மலர் தூவி, வாசனைத் தைலங்களைத் தெளித்தார்கள். பட்டுப்'பீதாம்பரம் விரித்த பஞ்சணையில் ஞானியை அமரச் செய்தார்கள். அரசரின் வரவேற்பைப் பெற்ற ஞானியார் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார். தன்னைக் கடவுள் அருள் பெற்றவராக நினைத்துக் கொண்டார்.




வரவேற்பு முடிந்ததும். ஞானியார் உபதேசம் செய்ய




தொடங்கினார். 'உலக வாழ்வு நிலையில்லாதது. நாம் நினைத்து




செய்யும் செயல்கள் எல்லாம் மாயையின் செயல்கள் அவைகளை




நாம் செய்வதில்லை என்று சொன்னார் அரச சபையில் கூடியிருந்த அனைவரும் ஞானியார் சொல்வதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்க




ஞானியார் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். இந்தப் பிரபஞ்சம் ஒரு மாயையின் வடிவம். இதில் உண்டாகும் அண்ட கோடி உயிரினங்களும் மாயையின் தோற்றம். இவை அனைத்தும் உண்மையல்ல என்று சொன்னார்




தெனாலிராமன் அரசரையும் சபையில் இருந்த பெரியோர்களையும் பார்த்தார். அனைவரும் ஞானியார் பேச்சை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தெனாலிராமன் உடனே எழுந்தார். 'அரசே! எனக்கு ஒரு சந்தேகம். அதை ஞானியாரிடம் கேட்கலாமா? என்று கேட்டா




அரசர் கேட்கலாம் என்று அனுமதி கொடுத்தார்




தெனாலிராமன் ஞானியாரைப் பார்த்தார். 'ஞானியார் பெருமானே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் மும்மூர்த்திகள் செய்கிறார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அவைகளும் மாயையா?' என்று கேட்டா




'ஆம் நாம் உண்பதும் உறங்குவதும் உண்மையல்ல. இவைகளும் மாயை' என்று சொன்னார்




தெனாலிராமன் அரசரைப் பார்த்தார். 'அரசே எல்லாம் மாயை என்று ஞானியார் சொல்கிறார். நினைப்பிற்கும். செயலுக்கும் பொருள் வேறுபாடு உண்டு என்று சொன்னார்.


'அப்படியா? அதை விளக்க வேண்டும் என்று அரசர்




சொன்னார்.




அரசே! ஒருவன் உண்பது செயல். உண்ண வேண்டும் என்று மனதில் நினைப்பது எண்ணம். உண்டால் பசி தீருமா, நினைத்தால் பசி தீருமா? இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளுக்கு ஞானியார் என்ன பதில் சொல்கிறார்' என்று கேட்டார்.




இவைகள் மணப் பிரம்மைகள் மாயையின் செயல்பாடு களன்றி வேறில்லை' என்று ஞானியார் சொன்னார்.




'ஞானியார் சொல்வது உண்மையானால் அரசே! இன்று நடக்கும் விருந்தில் நாம் அனைவரும் சாப்பிட்டுப் பசி போக்குவோம். ஞானியார் மட்டும் மாயையின் செயலால் பசி தீரட்டும் என்று தெனாலிராமன் சொன்னார்.




தெனாலிராமன் பதிலைக் கேட்டதும் அரசர் ஞானியாரைப் பார்த்தார். ஞானியார் எழுந்து தெனாலிராமன் அருகில் வந்தார். தெனாலிராமா?அரசரிடம் விளக்கம் கேட்பது போல் என் அறியாமையைப் போக்கிவிட்டாய்' என்று சொன்னார்.




இருவரும் என்ன பதில் பேசிக் கொள்கிறார்கள் என்று அரசர் கவனித்தார். ஞானியார் தலைவணங்கி தெனாலிராமன் சொல்வது உண்மை என்று ஏற்றுக் கொண்டார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்