இந்த வலைப்பதிவில் தேடு
In this post we are providing good stories for children and moral stories to develop good thinking for children and spiritual Spiritual Stories, Comedy Stories, Short Stories, Short Novels, Life Stories, and Thenaliraman Stories, Ambulimama Stories, So in which record are the stories of Vikramaditan Vedalam, 63 Nayanmars stories, 12 Alvars stories, and all God stories? Thanks to parents and teachers to connect their children with good stories for the future of their lives
சிறப்புடையது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திலகாஷ்ட மகிஷ பந்தனம்
#thenali raman story in tamil
தெனாலிராமனுக்கு நாளுக்கு நான் அரசரிடம் அன்பு வளர்ந்தது. அரசரும் தெனாலிராமன் மேல் மரியாதையும் பாசமும் நேசமும் கொண்டு நடந்து வந்தார்.
இராஜகுரு அரசரும் தெனாலிராமனும் நெருங்கிப் பழகுவது கண்டு பொறாமைப்பட்டார். இருவரையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான சூழ்ச்சியைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் தெனாலிராமன் ஆணவத்தை அடக்க வேண்டும். பிறகு அவன் புகழுக்குக் கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும். கடைசியாக, தெனாலிராமன் எதற்கும் தகுதியற்றவன் என்று பலரும் அறியும்படி செய்ய வேண்டும் என்று இராஜகுரு முடிவு செய்தார்.
வடநாட்டில் இருந்து ஒரு புலவரை அழைத்து வந்தார். அவரை அரசரிடம் அழைத்துச் சென்றார். 'அரசே! ஒரு புலவர் இவருக்கு வடமொழியிலும் தென் மொழியிலும் சிறந்த புலமை உண்டு. அதனால், இவரை வடநாட்டில் பெரும்புலவர் என்று அழைப்பார்கள் என்று இராஜகுரு சொன்னார். இராஜகுரு அறிமுகம் செய்துவைத்த புலவரை அரசர் உற்றுப் பார்த்தார். உயரமான உருவம், பருத்த உடல், வலிமை மிக்க தோள்கள் கூர்மையாக பார்க்கும் கண்கள் இப்படிப்பட்ட தோற்றம் உடைய புலவரைப் பார்த்ததும் அரசருக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது.
'புலவரே! தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ப தகுதியான பணியை இங்கு தருகிறேன். இங்கு பணியாற்றும் புலவர்களையும் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்' என்று சொன்னார்.
'அரசே! இவர் புலமைக்கு முன் நம் அரச சபையில் இருக்கும் புலவர்கள் ஒருவரும் நிற்க முடியாது' என்று இராஜகுரு சொன்னார்.
அரசர் மீண்டும் ஒருமுறை புலவரைப் பார்த்தார்.
ஏன் அவரைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவரிடம் கேள்வி கேட்டுப் பாருங்கள். அப்படித் தாங்கள் கேட்காவிட்டால் நம் புலவர் தெனாலிராமனைக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள்' என்று சொன்னார்.
அரசருக்கு இராஜகுரு சொன்னது சரியென்று தெரிந்தது.
'இராஜகுருவே! தாங்கள் சொல்வது போல் இப்புலவரைத் தெனாலிராமனிடம் அனுப்புவோம். அவர் இவர் திறமையைச் சோதிக்கட்டும்' என்று சொன்னார்.
வேண்டாம் அரசே! வேண்டாம் தெனாலிராமரை இங்கே வரச் சொல்லுங்கள் நம் இருவர் எதிரில் ஒருவருக்கொருவர். தங்கள் புலமையைச் சோதிக்கட்டும். இருவரில் யார் புலமையில் சிறந்தவர் என்று நாம் தேர்வு செய்யலாம்' என்று சொன்னார்.
இராஜகுருவே நீங்கள் சொல்வது சரி நான் தெனாலிராமரை வரச் சொல்கிறேன்' என்று காவலரை அழைத்தார்.
காவலன் வந்தான். அவனிடம் தெனாலிராமனை அழைத்து வருமாறு சொன்னார்.
காவலன் தெனாலிராமன் வீட்டிற்குச் சென்றான். அவரிடம் அரசர் அழைப்பதாகச் சொன்னான். தெனாலிராமனும் காவலனுடன் அரண்மனைக்கு வந்தார்.
அரண்மனையில் இராஜகுரு அமர்ந்திருந்தார். அவர் அருகில் புதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அரசர் அவர்கள் அருகில் அமர்ந்திருந்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் அரசர் வரவேற்றார். 'தெனாலிராமா! நம் இராஜகுருவின் அருகில் அமர்ந்திருப்பவர் பெரும்புலவர். வடநாட்டிலிருந்து வந்திருப்பவர். பல மொழிகளில் புலமைப் பெற்றவர்' என்று சொன்னார்.
அரசே! அப்புலவரைப் பற்றி தாங்கள் சொன்னவை யாவும் நம் இராஜகுரு சொன்னவைதானே!' என்று கேட்டார்.
தெனாலிராமன் இவ்வாறு கேட்டதும் அரசர் திகைத்துப் பார்த்தார். இவருக்கு எப்படி இங்கு நடந்தது தெரியும்?' என்று யோசித்தார்.
'அரசே! என்ன யோசிக்கிறீர்கள். தெனாலிராமனுக்கு
இதெல்லாம் எப்படித் தெரியும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். 'ஆமாம்' என்று சொல்வது போல் அரசர் தலையை ஆட்டினார்.
வடநாட்டுப் புலவர் தெனாலிராமனைப் பார்த்தார். இராஜகுரு அரசரைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார்.
‘புலவரே! இவர் எங்கள் விஜயநகரப் பேரவையின் விகடகவி இவரிடம் தங்கள் கேள்விகளைக் கேட்கலாம்' என்று அரசர் கூறினார்.
'அரசே! இவர் ஒருவர் தான் உங்கள் அவையில் இருக்கும் புலவரா? வேறு யாரும் இல்லையா? என்று வடநாட்டுப் புலவர் கேட்டார்.
"அதோ இருக்கிறார்கள்' என்று அரசர் மற்ற புலவர்களைக் காட்டினார். மற்ற புலவர்கள் ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
'அரசே! முதலில் உங்கள் புலவர்களை என்னிடம் கேள்வி கேட்கச் சொல்லுங்கள். பிறகு நான் அவர்களுடன் கேள்வி கேட்கிறேன்" என்று வடநாட்டுப் புலவர் சொன்னார்.
புலவர் சொன்னதைக் கேட்டதும் தெனாலிராமன் மற்ற புலவர்களைப் பார்த்தார். அனைவரும் பேசாமல் இருந்தார்கள்.
தெனாவிராமன் அரசரைப் பார்த்தார். அவரின் மனநிலையை உணர்ந்து கொண்டார். அரசே! நான் அந்தப்" புலவரிடம் கேள்வி கேட்கிறேன்' என்று சொன்னார்.
"என்ன! சிங்கத்தைச் சிறுநரி எதிர்ப்பதா?' என்று இராஜகுரு சொன்னார்.
இராஜகுரு சொன்னது தெனாலிராமன் காதில் விழுந்தது. 'இராஜகுருவே சிங்கத்திற்கு பலமுண்டு. ஆனால் தந்திரம் தெரியாது. நரிக்குத் தந்திரம் தெரியும். எவ்வனவு பெரிய பலசாலிகளையும் வென்றுவிடும். இது விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும். அதைத் தாங்கள் நாளைக்குக் காணலாம்' என்று சொன்னார்.
தெனாலிராமன் மற்ற புலவர்களை அருகில் அழைத்தார். நீங்கள் அனைவரும் இங்கு இருங்கள் நான் ஓலைச் சுவடியை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியில் சென்றார்.
புலவர்கள் அனைவரும் திகைத்துப் பார்த்தார்கள்.
சிறிது நேரம் கழித்துப் பட்டுத் துணியால் கட்டப்பட்ட ஓலைச்சுவடி போன்ற ஒன்றைத் தெனாலிராமன் கையில் கொண்டு வந்தார். 'தெனாலிராமரே! இது என்ன நூல்? இதில் உள்ள கதைகளைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்... எங்களுக்குச் சொல்லுங்கள்' என்று கேட்டார்கள்.
'புலவர்களே! பொறுமையாக இருங்கள்! இந்த நூல் ஓலைச் சுவடியைப் பற்றி நாளைக்குச் சொல்லுகிறேன். ஆனால் நீங்கள் நாள் சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
அனைவரும் தெனாலிராமன் சொன்னதற்கு தலை அசைத்தார்கள்.
அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு ஓலைச் சுவடியை எடுத்துக் கொண்டு வடநாட்டுப் புலவரிடம் சென்றார். அவர் தெனாலிராமன் கையில் ஓலைச் சுவடியுடன் வருவதைப் பார்த்தார். 'அது என்ன ஓலைச்சுவடியாக இருக்கும்' பெரிய
வடநாட்டுப் புலவர் பார்ப்பதை தெனாலிராமன் பார்த்தார். அவர் அருகில் சென்றார். 'புவலரே! தாங்கள் எல்லா ஓலைச் சுவடிகளையும் படித்து விட்டீர்கள். இந்த ஓலைச் சுவடியை படித்தீர்களா? என்று தன் கையில் உள்ளதைக் காட்டிக் கேட்டார்.
'இது என்ன ஓலைச் சுவடி?' என்று புலவர் கேட்டார்.
இது திலகாஷ்ட மகிஷ பந்தனம்' என்ற ஓலைச் சுவடி. என்ன திலகாஷ்ட மகிஷ பந்தனமா? இப்படி ஓர் ஓலைச் சுவடியை நான் பார்த்ததில்லை. இந்தச் சுவடி மிகப் பெரியதாக இருக்கிறது. இது என்ன நூல்' என்று கேட்டார்.
'இந்த ஓலைச் சுவடியில் இருந்துதான் நான் சில கேள்விகள் தங்களை நாளைக்குக் கேட்கப் போகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தெனாலிராமன் சென்றார்.
வடநாட்டுப் புலவனின் மனம் சஞ்சலப்பட்டது. எவ்வளவோ ஓலைச் சுவடிகளைப் படித்தோம். இதைப் படிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்திக் கொண்டார். நாளைக்குத் தெனாலிராமன் இந்த ஓலைச் சுவடியில் கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வது? அரச சபையில் அவமானப்பட்டு நிற்க வேண்டுமா? வேண்டாம். இரவோடு இரவாக விஜயநகரத்தை விட்டு ஓடிவிடுவோம் என்று நினைத்தார். இராஜகுருவிடம் கூட சொல்லாமல் சென்று விட்டார்.
மறுநாள் தெனாலிராமன் புலவர்களை அழைத்துக் கொண்டு அரசரிடம் சென்றார். அரசர் தெனாலிராமன் கையிலிருந்த ஓலைச் சுவடியைப் பார்த்தார். அரசே அந்தப் பெரும்புலவரிடம் வாதிட வந்திருக்கிறேன். அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னார்.
அரசர் இராஜகுருவை அழைத்து வருமாறு காவலர்களிடம் சொன்னார். காவலர்கள் இராஜகுரு வீட்டிற்குச் சென்று அழைத்து வந்தார்கள்.
அரசே! வடநாட்டுப் புலவன் வாதிட வரமாட்டார் என்று
இராஜகுரு தலை கவிழ்ந்து கொண்டு சென்றார்.
இராஜகுரு! என்ன சொல்லுகிறீர். தெனாலிராமன் வந்திருக்கிறார். அவரை அழைத்து வரச் சொல்லுங்கள்' என்று சொன்னார்.
'அரசே! என்னை மன்னிக்க வேண்டும். வடநாட்டுப் புலவர் இரவோடு இரவாக என்னிடம் சொல்லாமல் வீட்டை விட்டு போய் விட்டார்' என்று சொன்னார்.
இதெல்லாம் தெனாலிராமன் வேலை என்று அரசருக்கு தெரிந்துவிட்டது. ' தெனாலிராமா! நீ கொண்டு வந்துள்ள ஓலைச் சுவடியின் பெயரென்ன?' என்று கேட்டார்.
'அரசே! திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்று சொன்னார்.
அந்த ஓலைச் சுவடியைப் பிரித்துக்காட்டு என்று அரசர் சொன்னார்.
'அரசே! இதில் ஓலைச் சுவடிகள் இல்லை. எள்ளுக்குத் திலகம் என்று பெயர். காஷ்டம் என்றால் விறகு என்று பொருள். மகிஷம் என்றால் எருமை என்று பொருள். கயிற்றுக்குப் பந்தனம் என்று பொருள். எருமை கட்டும் கயிறு என்று பொருள். இதோ பாருங்கள்' என்று பட்டுத் துணியை அவிழ்த்துக் காட்டினார்.
அதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். இதைப் பார்த்தா வடநாட்டுப் புலவன் ஓடிவிட்டான்' என்று பேசிக் கொண்டார்கள்.
அந்தப் புலவர் இதைப் பார்த்து ஓடவில்லை. இந்தப் பெயரைக் கேட்டு ஓடி விட்டார்' என்று தெனாலிராமன் சொன்னார்.
அரசர் தெனாலிராமனைப் பார்த்து, 'இது நம் மானத்தைக் காத்த மகிஷ பந்தனம்' என்று சொன்னார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபலமான இடுகைகள்
ஞானிக்கு பாடம் சொன்ன இராமன்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக