இந்த வலைப்பதிவில் தேடு
In this post we are providing good stories for children and moral stories to develop good thinking for children and spiritual Spiritual Stories, Comedy Stories, Short Stories, Short Novels, Life Stories, and Thenaliraman Stories, Ambulimama Stories, So in which record are the stories of Vikramaditan Vedalam, 63 Nayanmars stories, 12 Alvars stories, and all God stories? Thanks to parents and teachers to connect their children with good stories for the future of their lives
சிறப்புடையது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜாதகத்தைப் பொய்யாக்கினார் தெனாலிராமன்
ஜாதகத்தைப் பொய்யாக்கினார் தெனாலிராமன் ஒரு நிரபராதியைக் கொலை செய்துவிட்டார். அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று அனைவரும்சொன்னார்கள்.
#thenali raman story in tamil
அரசர் யோசித்துக் கொண்டிருந்தார். 'அரசே! ஏன் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள். தெனாலிராமனை அழைத்து விசாரணை நடத்துங்கள்' என்று அமைச்சர் சொன்னார்..
தெனாலிராமா! உனக்கு என்ன ஆயிற்று. ஏன் இப்படிச் செய்தாய்?' என்று அரசர் கேட்டார்.
அவரை எதற்காக கேட்கிறீர்கள்? ஓர் அந்தணப் புரோகிதனைக் கொல்வது மன்னிக்க முடியாத குற்றம். இக்குற்றத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' என்று சொன்னார் இராஜகுரு.
'தெனாலிராமா! இப்பொழுது சொல் அவரை ஏன் வெட்டினீர்?' என்று அரசர் கேட்டார்.]
'அரசே! துரோகியையும், ஒற்றனையும், கொல்வது குற்றமென்றால் எனக்குத் தண்டனை வழங்குங்கள்' என்று தெனாலிராமன் சொன்னார்.
இந்த வார்த்தையைக் கேட்டதும் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். புரோகிதன் வேடத்தில் வந்தவன் துரோகியா? என்ற கேள்விக்குறி அனைவர் முகத்திலும் தோன்றின.
‘தெனாலிராமன் சொல்வது பொய். அந்தணப் புரோகிதன் ஒரு பாவமும் அறியாதவன். கொலைக்குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத் தெனாலிராமன் இறந்த புரோகிதன் மீது குற்றம் சுமத்துகிறார் அரசே! இறந்தவர் துரோகி என்பதைத் தெனாலிராமனால் நிரூபிக்க முடியுமா?' என்று இராஜகுரு கேட்டார்.
இராஜகுருவின் கேள்விக்குத் தெனாலிராமன் பதில் சொல்லாமல் இருந்தார்.
அரசர் தெனாலிராமனைப் பார்த்தார். ' தெனாலிராமா ஏன் இராஜகுருவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருக்கிறாய்' என்று கேட்டார்.
தெனாலிராமன் கிருஷ்ணதேவராயர் ஒற்றனைப் பார்த்தார். ஒற்றன் தன் கையிலிருந்த பொன்காசுப் பையை எடுத்துக் கொடுத்தான்.
'அரசே! இந்தப் பையை திறந்து பாருங்கள் உண்மை புரியும் என்று கொடுத்தார்.
அரசர் அந்தப் பையை வாங்கிப் பார்த்தார். பையில் பொற்காசுகள் இருந்தன. அதனுடன் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்த அரசர் படித்தார். அக்கடிதத்தில்,
"புரோகிதனே! விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவராயர் பீஜப்பூர் நாட்டின் மீது படையெடுக்க இருக்கிறார். அவரைப் படையுடன் போருக்கு வராமல் வேண்டும். கிருஷ்ணதேவராயர் விஜயநகரத்தில் இருந்தால் நாங்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கி எளிதில் வெற்றி பெறுவோம்" என்று எழுதியிருந்தது.
கடிதத்தைப் படித்து முடிந்ததும் அரசர் அதைச் சுருட்டி கையில் பிடித்தார். தெனாலிராமனை உற்றுப் பார்த்தார்.
'அரசே! நம் படைகள் போர்க்கோலம் பூண்டு பீஜப்பூர் மேல் செல்ல இருந்த நேரத்தில் இந்தப் புரோகிதன் என்ன சொன்னான் என்று நினைவிருக்கிறதா?' என்று கேட்டார்.
எனக்கு சொன்னார்.
நினைவிருக்கிறது தெனாலிராமா?' என்று
‘அவன் துரோகி என்பதை நான் தெரிந்து கொண்டதால் என்னிடமும் உங்களிடமும் புரோகிதன் போல் நடித்தான் அதுமட்டுமல்ல, சோதிடத்தில் வல்லவன் போல் தன்னைச் சுட்டிக் காட்டிக் கொள்ள என்னிடம் சவால் விட்டான். அதைக் கேட்டு நான் பயந்து அவன் துரோகத்தை மறந்து விடுவேன் என்று எண்ணினான். ஆனால் அவனை உயிருடன் நடமாடவிட்டால் நம் நாட்டைப் பகைவனுக்கு காட்டிக் கொடுப்பான் என்று நினைத்துத்தான் அவன் சொன்ன சாதகத்தைப் பொய்யாக்குகின்றேன் என்று வெட்டி வீழ்த்தினேன் என்று தெனாலிராமன் சொன்னார்.
அரசர் தெனாலிராமன் சொன்னதைக் கேட்டு மெளனமாக நின்றார். அவர் பார்வை அருகிலிருந்த இராஜகுரு மீது சென்றது.
இராஜகுரு தான் சொன்னது அனைத்தும் பொய்யானதை நினைத்துத் தலைகவிழ்ந்து நின்றார்.
'அரசே! இப்பொழுது சொல்லுங்கள் நான் செய்தது தவறு என்று நீங்கள் நினைத்தால் எனக்குத் தண்டனை வழங்குங்கள் ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொன்னார்.
'தெனாலிராமா! துரோகிகளுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை அவனுக்கு கிடைத்துவிட்டது. அதுவும் உன் கையால் கிடைத்துவிட்டது. இதைத்தவறு என்று எப்படிச் சொல்ல முடியும். உன் செயலால் ஜாதகம் பொய் என்று நிரூபித்து விட்டாய்' என்று சொன்னார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபலமான இடுகைகள்
ஞானிக்கு பாடம் சொன்ன இராமன்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக