முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

இடங்கழி நாயனார்

 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...

ஏன் வீடு

ஒரு நாளுமில்லாத திருநாளாகத் தெனாலிராமன் அன்று பளபளவென்று ஆடையணிந்து, கழுத்தில் தங்கச் சங்கிலி விரல்களில் மோதிரம் போட்டுக் கொண்டு ஆடம்பரமாக அரண்மனைக்கு வந்திருந்தான்.


அவனைப் பார்த்துவிட்டு மன்னர். "ராமா! கோடீஸ்வரனாகி விட்டாய் போலத் தெரிகிறது. ஏன்  ஆக மாட்டாய்? கொஞ்சப் பரிசுகளா நான் உனக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறேன்." என்றார்.


"நான் எப்போதும் பழைய ராமன் தான். அரசே! மாறவே மாட்டேன் என்றாள் ராமன்.


"இல்லை. நீ முதன் முதலாக இங்கே வந்த போது அடக்கமும், எளிமையும் நிரம்பியவனாக இருந்தாய். இன்று நீ அடைத்திருக்கும் நிலையை எண்ணிப் பார்;" என்றார் மன்னர்.


"உண்மை. அரசே! அதிர்ஷ்டக் காற்றடிக்கும் போது மக்கள் மாறிந்தான் போய் விடுகிறார்கள். நீங்கள் என் மீது மிகவும் கருனை காட்டினீர்கள். பொருட்களை அள்ளியள்ளி எனக்குக் கொடுத்தீர்கள். நீங்கள் கொடுத்த பரிசுகளை எல்லாம் நான் சேமித்து வைத்திருக்கிறேன்" என்றான் ராமன்,


"சேமிப்பதாளாலும், செவழிப்பதனாலும் என்ன பயன்? 

ஈதல் கொடுக்கும்  மகிழச்சியை  நீ அறிய வேண்டும். ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் போது ஒருவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதற்கு  ஈடே இல்லை" என்றார் மன்னர்.

ஆனால் நான் எந்தப் பொருளையும் சேமித்து வைத்திருக்கவில்லை, சேமிக்கத் தொடங்கும் போது, பிறருக்குக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். என்றான். ராமன்,


“ஒரு நல்ல வீடு கட்டு. தகுதியுள்ள ஒருவனுக்கு அதைக் கொடு." என்றார் மன்னர்.


"ஆகட்டும். பிரபு:" என்றாள் ராமன்






ராமன் மிகவும் சுறுசுறுப்பாகி விட்டான். தேவையான கற்கள், மணல். சுண்ணாம்பு. மரங்கள், மற்றும் தட்டு முட்டு சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டே யிருந்தான். தானே இருந்து பரிசோதித்துப் பார்த்ததால் அந்தப் பொருட்கள் தரமிக்கவையாக இருந்தன.


கொத்தனாரும், சித்தாட்களும் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையம் செய்தான். அவர்களோடு அவனும் ஒரு தொழிலாளியாக இருந்து உழைத்தான்.


வீடு கட்டி முடிக்கப்பட்டது. அது  கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே அந்த வழியே செல்கிறவர்களின் முழுக் கவனத்தையும் அது ஈர்த்து விட்டிருந்தது. "அழகான வீடு" என்று அனைவரும் பாராட்டினார்கள்.


வாசகங்கள் எழுதப்பட்டிருந்த தட்டி ஒன்றை வீட்டுக்கு முன்புறத்தில் வைத்தான்


தன்னிடம் உள்ளதை கொண்டு எந்த மனிதன் திருப்தி அடைகிறானோ, அவனுக்கு இந்த வீடு பரிசாக அளிக்கப்படும் நான் திருப்தியுள்ளவன் போதுமென்ற பொன் செய்யும் மனம் படைத்துவன். எனக்கு இந்த வீட்டைப் பரிசாகத் தாருங்கள்! என்று கேட்டுக் கொண்டு ஒருவருமே வரவில்லை.


நாட்கள்.. மாதங்கள் கடந்து கொண்டேயிருந்தன. ஒரு நாள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழையனிதன் அந்தப் பக்கமாக வந்தான், தட்டியில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தான். இன்னொரு முறை படித்தான். இன்னொரு முறை..


இப்படியொரு விந்தை செய்கிறவனும் இந்த உலகத்தில் இருப்பானா! என்று அவன் ஆச்சரியப்பட்டான்.


இந்த வீட்டைப் பரிசாகப் பெற எனக்குத் தகுதி இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டான்.

அவன் ராமனிடம் வந்து, "பெருந்தன்மை படைத்த நீங்கள்தான் இந்த வீட்டைக் கட்டியவரா? உலகத்திலேயே மிகுந்த திருப்தியுள்ளவன். மகிழ்ச்சி நிரம்பியவன் நானாகத்தான் இருப்பேன். என்னிடமிருப்பதே எனக்குப் போதும், பேராசையே எனக்குக் கிடையாது. ஆகவே. எனக்கு உங்கள் வீட்டைக் கொடுங்கள்" என்றான்.


ராமன் சிரித்தான்.


"ஏன் சிரிக்கிறீர்கள்? நான் தமாஷ் செய்யவில்லை" என்றான் கிராமத்தான்.


"வாசகங்களை நன்றாகப் படித்தீர்களா?” என்று கேட்டான் ராமன்.


பல முறை படித்தேன்.












அப்படியானால் வீட்டை எனக்குக் கொடுங்கள் என்று என்னிடம் வந்து கேட்டிருக்க மாட்டீர்களே! உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதைக் கொண்டு நீங்கள் திருப்தியும், மகிழ்ச்சியும் நிறைந்தவராக இருந்திருந்தால், உங்களுக்கு இந்த வீட்டின் மேல் ஆசை எப்படி உண்டாகியிருக்கும்? இன்னும் வேண்டும். இதுவும் வேண்டுமென்று எதையுமே நீங்கள் கேட்கக்கூடாது. இந்த வீட்டைக் கேட்கவே கூடாது!" என்றான் ராமன்.


கிராமத்தான் வெட்கப்பட்டுக்கொண்டே வேகமாக நடக்கத் தொடங்கினான்.


ராமன், அரண்மனைக்கு வந்து, இந்த நிகழ்ச்சியை மன்னரிடம் விளக்கமாக எடுத்துரைத்தான்.


"அறிவுச் சுரங்கம் நீ உன் வீட்டைப் பரிசாகப் பெற, உலகத்தில் எவருக்குமே தகுதியில்லை. அருகதையில்லை யென்று நீ நினைத்ததால், அதை என்னதான் செய்யப் போகிறாய்?" என்று மன்னர் அவனிடம் கேட்டார்.













என்னால் வேறென்ன செய்ய முடியும்? ஒரு நல்ல நாள். நல்ல நேரம் பார்த்து, நானே அந்த வீட்டில் குடி புகுந்துவிடுவேன். ஆனால், எப்போது வேண்டுமானாலும், என் வீட்டையும், என்


இதர பொருட்களையும், தகுதியுள்ளவர்களுக்குக் கொடுத்துவிட நான் தயாராக இருக்கிறேன். வெறும் பேச்சாக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. உங்களிடம் நிரூபித்தும் காட்டியிருக்கிறேன் என்றான் ராமன்.


"ஆமாம். ஆமாம். என்று சிரித்தார் மன்னர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்