இந்த வலைப்பதிவில் தேடு
In this post we are providing good stories for children and moral stories to develop good thinking for children and spiritual Spiritual Stories, Comedy Stories, Short Stories, Short Novels, Life Stories, and Thenaliraman Stories, Ambulimama Stories, So in which record are the stories of Vikramaditan Vedalam, 63 Nayanmars stories, 12 Alvars stories, and all God stories? Thanks to parents and teachers to connect their children with good stories for the future of their lives
சிறப்புடையது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மதியும் சதியும் - தெனாலிராமன் கதை
குறுக்கும் நெடுக்குமாக உலாவிக்கொண்டிருந்தார் இராஜகுரு. ஒரு நகைச்சுவைக் கவிஞன் நம்மை அவமானப்படுத்துவதா? அரசரும் அவன் மீது எவ்வளவு அன்பு காட்டுகிறார். அந்த அன்பை அழிக்க வேண்டும். அரசரிடம் அவமானப்பட்டு அடி வாங்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
தெனாலிராமன் இராஜகுருவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டிருந்தார். இராஜகுரு தன்னை எப்படியாவது பழி வாங்குவார். அவரிடம் நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று உணர்ந்திருந்தார்.
ஒரு நாள் இராஜகுரு தெனாலிராமன் நடத்தையைப் பற்றி அரசரிடம் சொன்னார் அரசர் இராஜகுருவின் பேச்சை உண்மை என்று நம்பினார். தெனாலிராமனை விசாரித்துத் தக்க தண்டனை கொடுப்பதாகச் சொன்னார்.
தெனாலிராமனுக்கு இச்செய்தி தெரிந்தது. இராஜகுருவின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார்.
ஒரு நாள் காலையில் பல் துலக்கிக் கொண்டு ஊர்க்குளக்கரைக்குச் சென்றார். குனத்தில் இராஜகுரு குளித்துக் கொண்டிருந்தார். இவரைப் பழி தீர்கக இதுதான் நல்ல சமயம் என்று தெனாலிராமன் நினைத்தார். இராஜகுருவே! உங்களுடைய ஆடை காற்றில் பறந்து செல்கிறது. போய் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்.
குரல் வந்த திசையில் தெனாலிராமன் இருப்பதை இராஜகுரு பார்த்தார். 'தெனாலிராமா! காற்றில் பறந்து செல்லும் என் துணியை எடுத்துக்கொண்டு வந்து கொடு என்று கேட்டார்"
'இராஜகுருவே நீங்கள் ஆச்சாரங்களை கடைப்பிடிப்ப வர்கள். உங்கள் ஆடைகளை நான் தொட்டால் தீட்டு வந்துவிடும். பிறகு அதை நீங்கள் உடுத்திக் கொள்ள மாட்டீர்கள். அதனால்உங்கள் ஆடையை நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள், என்று சொன்னார்.
தெனாலிராமன் சொன்னதைக் கேட்டதும் குருவிற்கு என்செய்வதென்று புரியவில்லை. ஆடை இல்லாமல் கரைக்கு எப்படிசெல்லமுடியும்? என்று யோசித்தார் 'தெனாலிராமா! ஆபத்துக்கு
தோஷமில்லை என்று வேதங்கள் சொல்கின்றன. அதனால்காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆடையை எடுத்து வந்து கொடு" என்று கேட்டார். இராஜகுருவின் பேச்சைக் கேட்டதும் தெனாலிராமனுக்கு இரக்கம் ஏற்பட்டது. ஆடையை எடுத்து வந்து கொடுக்கலாமா என்று யோசித்தா
தெனாலிராமா' என்ன யோசிக்கிறாய்? உன்னை பற்றி அரசரிடம் ஒன்றும் சொல்லமாட்டேன். சீக்கிரம் ஆடையை எடுத்து வந்து என்னிடம் கொடு' என்று இராஜகுரு கேட்டார்
இராஜகுரு. அரசர் என்று சொன்னதும் தெனாலிராமனுக்கு இராஜகுரு தன்னைப் பற்றி அரசரிடம் சொன்னது நினைவிற்கு வந்தது. தன்னைப் பழி தீர்க்க நினைத்த இராஜகுருவைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவுசெய்தார். இராஜகுருவே! குளக்கரைக்குப் பெண்கள் வருகிறார்கள். சீக்கிரம் குளித்துவிட்டுக் கரைக்கு வாருங்கள்' என்று சொன்னார்
'தெனாலிராமா! என் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாய். ஆடை இல்லாமல் நான் கரைக்கு வரமுடியாது. தயவுசெய்து பெண்கள் குளக்கரைக்கு வருவதற்கு முன் ஆடையைக் கொண்டு வந்து கொடு என்று கேட்டா
-இராஜகுருவே! பலர் தண்ணீர் எடுக்கும் பொதுக்குளத்தில் குளிப்பது தவறு. அதிலும் ஆடையில்லாமல் குளிப்பது பொது மக்களுக்கும் அரசருக்கும் தெரிந்தால். என்ன நடக்கும் தெரியுமா? என்று கேட்டார்
'தெரியும், என் மானம் மரியாதை போகும் நீதான் என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று இராஜகுரு கேட்டார்.
'சரி. உங்களை இந்த நிலையிலிருந்து காப்பாற்றுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. அதற்கு நீங்கள் கட்டுப்பட்டு நடந்தால் பெண்கள் வருவதற்குள் உன் ஆடையைக் கொண்டு வந்து கொடுக்கிறேன்' என்று சொன்னார்.
இராஜகுரு வேறு வழியின்றி தெனாலிராமன் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார்.
தெனாலிராமன் இராஜகுருவின் வாய் வாக்குறுதியை நம்பவில்லை. இராஜகுருவே! என் நிபந்தனைப்படி தாங்கள் நடப்பதாக என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடுக்க 'வேண்டும்' என்று சொன்னார்.
இராஜகுரு சரி என்று ஒப்புக் கொண்டார். அந்த நிபந்தனை என்ன என்று கேட்டார்.
முதலில் என் கைமீது அடித்துச் சத்தியம் செய்யுங்கள். பிறகு நிபந்தனையை சொல்கிறேன் என்று கைகளை நீட்டினார்.
இராஜகுரு தெனாலிராமன் கைகளைப் பிடித்துச் சத்தியம் செய்து கொடுத்தார். தெனாலிராமன் இராஜகுரு காதருகில் சென்று நிபந்தனையைச் சொன்னார். அதைக் கேட்டதும் இராஜகுரு திகைத்து நின்றார்.
"இராஜகுருவே தாங்கள் என் நிபந்தனைப்படி நடப்பதாகக் கைமீது அடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்கள். இதை மீறக் கூடாது' என்று சொன்னார்.
சரி முதலில் ஆடையைச் கொண்டு வா என்று இராஜகுரு சொன்னார்.
தெனாலிராமன் இராஜகுருவின் ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தார். இராஜகுரு ஆடைகளை உடுத்திக் கொண்டு தெனாலிராமனைப் பார்த்தார்.
'ஏன் பார்க்கிறீர்கள். 'உட்காருங்கள். உங்கள் தோள் மீது ஏறிக்கொள்கிறேள் என்று சொன்னார். இவனை எப்படியும் பழி தீர்த்தே ஆக வேண்டும். இவன் என்தோள்மீது ஏறட்டும். இவனைச் சுமந்து கொண்டு அரசர் முன் சென்று அவரிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அதைக் கேட்டு அரசர் இவனுக்குத் தகுந்த தண்டனையைக் கொடுப்பார் என்று நினைத்து கொண்டிருந்தார். .
இராஜகுரு உட்கார்ந்தார். தெனாவிராமன் அவர் தோள்மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். இராஜகுரு அவனைச் சுமந்து கொண்டு தெரு வழியாகச் சென்றார்
தெருவில் வருவோர் போவோரெல்லாம் இவர்களைப் பார்த்தார்கள்; இராஜகுரு தெனாலிராமனை ஏன் சுமந்து கொண்டு செல்கிறார்?' என்று பேசிக்கொண்டு சென்றார்கள். சிலர் தெனாலிராமனிடம் "உன்னை எதற்காக இராஜகுரு தோள்மீது வைத்துச் சுமந்து செல்கிறார்?" என்று கேட்டார்க
இராஜகுரு வேதமறிந்த கவிஞன். ஒருவனைச் சுமந்தால் செய்த பாவங்கள் போகுமாம். இதை உணர்ந்த இராஜகுரு என்னைத் தன் தோளில் சுமந்து செல்கிறார். என்று தெனாலிராமன் பதில் சொன்னார்
சொன்னதைக் கேட்டதும். இராஜகுருவிற்குக் கோபம் வந்தது. இந்த நரமனிதனை நான்" சுமப்பதால் என் பாவம் போகுமாம். எவ்வளவு திமிர். இதற்கெல்லாம் சேர்த்து தெனாலிராமனை இந்த ஊரை விட்டே ஓட்டுகிறேன் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டு நடந்தார்
தெனாலிராமன்
அரண்மனை வழியாக இராஜ்குரு சென்றார். அரண்மனைக் காவலாளிகள் பலர் பார்த்தார்கள் இது என்ன அறியாயம்? இராஜகுரு தோளில் ஏறி தெனாலிராமன் வருவதா? இது அக்ரமம்” என்று பேசிக்கொண்டு அரண்மனைக்குள் ஓடினார்கள். அரசரிடம் தாங்கள் கண்டதை சொன்னார்கள்
காவலர்கள் சொன்னதை அரசர் நம்பவில்லை, பலரும் வந்து சொன்னதைக் கேட்டதும் இது உண்மையாக இருக்குமா? என்று சந்தேகம் வந்தது. அந்தக் காட்சியை நேரில் காண வேண்டும் என்று அரண்மனை மாளிகை மாடத்திற்கு வந்தார்.
இராஜகுரு தோள்மீது தெனாலிராமன் அமர்ந்து கொண்டு இருக்கிறார். இராஜகுரு நடந்து வருகிறார். இதைப் பார்த்ததும் அரசருக்குக் கோபம் வந்தது. 'யாரங்கே! மனிதனை மனிதன் சுமப்பதா? இந்த இழிச் செயலில் ஈடுபட்டு மனிதன் மீது ஏறிவரும் அவனை அடித்து இழுத்து வாருங்கள்' என்று கோபமாகச் சொன்னார்.
தெனாலிராமன் அரசர் மாளிகையில் வந்து பார்த்ததைப் பார்த்தார். காவலர்களை அழைத்து அனுப்பியதைக் கண்டார். ஏதோ நடக்கப் போகிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். 'இராஜகுருவே நில்லுங்கள்' என்று சொன்னார்.
இராஜகுருவே! என்னைத் தாங்கள் வெகுதூரம் வரை சுமந்து வந்துவிட்டீர்கள். இது போதும் இனித் தாங்கள் என் தோள்மீது ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். தங்களை அரண்மனை வாசலில் கொண்டு சென்று இறக்குகிறேன்' என்று சொன்னார்.
தெனாலிராமன் சொன்னதைக் கேட்டதும் இராஜகுரு மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அரண்மனைக்குத் தன்னைத் தூக்கிச் சென்றதும் அங்குள்ளவர்களிடம் உண்மையைச் சொல்லி தெனாலிராமனுக்குத் தகுந்த தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
இராஜகுரு தெனாலிராமன் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டார். தெனாலிராமன் அவரைச் சுமந்து கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தார்.
காவலாளிகள் கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு வேகமாக நடந்து வந்தார்கள். எதிரே தெனாலிராமன் தோள்மீது இராஜகுரு அமர்ந்து வருவதைப் பார்த்தார்கள். 'இது என்ன ஆச்சரியம் சற்று முன் தெனாலிராமனல்லவா இராஜகுரு தோள்மீது வந்தார். இப்பொழுது...? என்று பேச்சை நீட்டினான் காவலாளி.
தெனாலிராமனாக இருந்தாலென்ன? இராஜகுருவாக இருந்தால் என்ன? மனிதன் மீது மனிதன் ஏறி வருவது தவறுஎன்று அரசர் சொன்னார். அதற்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்கச் சொன்னார். இப்பொழுது இராஜகுருதான் தெனாலிராமன் மீது ஏறி வருகிறார். இவருக்கு அரசர் சொன்னபடி தண்டனை கொடுக்க வேண்டும் என்று காவலாளிகள் சொன்னார்கள்.
அனைவரும் சேர்ந்து இராஜகுருவை தெனாலிராமன் தோள் மீதுருந்து இறக்கி சவுக்கால் அடித்தார்கள். இராஜகுரு கத்திகதறி அழுதுகொண்டு ஓடி அரசர் முன் நின்றார். நடந்தவற்றை யெல்லாம் அரசரிடம் சொன்னார்.
அரசே! இராஜகுரு என்னைத் தங்களிடம் அடிவாங்கும் படிச் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சி செய்தார். அதை அறிந்த நான். என் சூழ்ச்சியால் அவரை வென்றேன்' என்று தெனாலிராமன் சொன்னார்..
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபலமான இடுகைகள்
ஞானிக்கு பாடம் சொன்ன இராமன்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக