இந்த வலைப்பதிவில் தேடு
In this post we are providing good stories for children and moral stories to develop good thinking for children and spiritual Spiritual Stories, Comedy Stories, Short Stories, Short Novels, Life Stories, and Thenaliraman Stories, Ambulimama Stories, So in which record are the stories of Vikramaditan Vedalam, 63 Nayanmars stories, 12 Alvars stories, and all God stories? Thanks to parents and teachers to connect their children with good stories for the future of their lives
சிறப்புடையது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அறிவால் பெற்ற மரணமில்லா வாழ்வு
கிருஷ்ணதேவராயர் சோல்குண்டா மன்னரை வென்று வெற்றி வாகையுடன் விஜயநகரம் திரும்பினார். தோல்வி அடைந்த கொல்குண்டா மன்னன் எப்படியாவது கிருஷ்ணதேவ ராயரைக் கொல்ல வேண்டும் என்று நினைத்தான். தன் அமைச்சரை அழைத்தான். அவரிடம் தன் எண்ணத்தைச் சொன்னார்.
#thenali raman story tamil
'அரசே! நீங்கள் கவலைப்படாதீர்கள். விஜயநகர மன்னனை ஒழித்துக் கட்டுகிறேன்' என்று அமைச்சர் சொன்னார்.
'அது எப்படி முடியும்? என்று கேட்டார்.
thenali raman story
'நீங்கள் சொன்னதை முடித்துக் கொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார்.
நாட்கள் சென்றன. அமைச்சர் அரசனைப் பார்க்க வந்தார்.
tenali raman
அரசர் அமைச்சரைப் பார்த்ததும் 'நாள் சொன்ன காரியம் என்ன
ஆயிற்று என்று கேட்டார். 'அரசே! கிருஷ்ணதேவராயரைக் கொல்ல ஒற்றன் ஒருவனை அனுப்பியுள்ளேன். அவன் இன்று விஜயநகரம் சென்றிருப்பான்' என்று சொன்னார்.
அமைச்சரே! என்ன சொல்கிறீர்? ஒற்றனை விஜயநகரத்திற்கு அனுப்பினால் அவன் எங்கு தங்குவாள். எப்படி அரசரைக் கொல்வான்? என்று கேட்டார்.
அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து அனுப்பியிருக்கிறேன்' என்று அமைச்சர் சொன்னார்.
'என்ன ஏற்பாடு அதைச் சொல்?' என்று கேட்டார்.
'தெனாலிராமன் இப்பொழுது ஊரில் இல்லை. ஒற்றனை தெனாலிராமன் மனைவியிடம் சென்று தான் தெனாலிராமனின் தூரத்து உறலினன் என்று சொல்லி அவர் வீட்டில் தங்கும்படிச் சொன்னேன். பிறகு தெனாலிராமன் ஊருக்கு திரும்பிவருவதற்குள் அரசனை அவன் வீட்டிற்கு வரவழைத்துக் கொல்லும்படி கூறி அனுப்பியுள்ளேன்' என்று சொன்னார்.
அமைச்சரே! நீ சொன்னது போல் அந்த ஒற்றன் செய்து முடிப்பானா?' என்று கேட்டார். 'நிச்சயம் முடிப்பான், அவன் அச்செயலைச் செய்யும் போது அகப்பட்டுக் கொண்டால் அவன் உயிர்தான் போகும். அவனா
எந்தப்பழி:பும் வராது' என்று சொன்னார்
சரி எப்படியாவது நம் எண்ணம் நிறைவேறினால் பகைவன் ஒழிந்தான் என்ற மன நிம்மதியோடு வாழலாம்' என்று அரசர் சொன்னா
கோல்குண்டாவிலிருந்து விஜயநகரம் வந்த ஒற்றன். தெனாலிராமன் வீட்டிற்குச் சென்றான். அவர் மனைவியைப் பார்த்தான். தான் தெனாலிராமனின் தூரத்து உறவினன்
இங்கு தங்கி அரசரிடம் ஏதாவது வேலையில் சேர வந்திருக்கிறேன். நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டா
தெனாவிராமன் மனைவி அவனைப் பார்த்துச் சிறிது நேரம் யோசித்தாள். அவருக்கு தூரத்து உறவினர் யாரும் இல்லையே என்று யோசித்துக் கொண்டே ஒற்றனைப் பார்த்தாள். ஒற்றன் பயத்துடன் 'என்னை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் பொய் சொல்லவில்லை. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் நான் வெளியில் தங்கிவிடுகிறேன். அவர் வந்த பிறகு உண்மையைச் சொல்லி இவ்வீட்டில் தங்குகிறேல்' என்று சொன்னான்
'அவர் உறவினராக இருந்து ஏன் வெளியில் தங்க வேண்டும்? அவர் வீட்டில் தங்கிவிடு' என்று சொன்னாள். ஒற்றன் மகிழ்ச்சியுடன் தெனாலிராமன் வீட்டில் தங்கினா
தெனாலிராமன் வருவதற்குள் வந்த வேலையை முடிக்க வேண்டும்
என்று சுறுசுறுப்பாக வேலை செய்தா
"அரசர் மாளிகைக்கு எப்படிச் செல்வது? அவரிடம் எப்படிப்பேசுவது? அவரை எப்பொழுது பார்ப்பது?' என்ற விஷயங்களை எல்லாம் தெனாலிராமன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
ஊருக்குச் சென்ற தெனாலிராமன் வீட்டிற்குத் திரும்பி வந்ததால் அவர் மனைவி ஊருக்குப் புறப்பட்டாள். ஒற்றனுக்கு நல்ல சமயமாக வாய்த்தது
ஒருநாள் ஒற்றன் அரண்மனைக்குச் சென்றான். அரண்மனையிலுள்ள தூண்களில் மறைந்து கொண்டு அரசனைப் பார்த்தான். காவலாளிகள் அவனைப் பிடித்துச் சென்று அரசர் முன் நிறுத்தினார்க
நீ யார்? இங்கு ஏன் வந்தாய்? என்று அரசர் அவனை கேட்டார்
'அரசே! நான் தெனாலிராமன் உறவினன். அவர் வீட்டில்* தங்கியுள்ளேன். அவர் தங்களை வீட்டிற்கு அழைத்து வருமாறு ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார். அதைத் தங்களிடம் கொடுக்க வந்தேன். நேரில் கொடுக்க பயமாக இருந்ததால் தயங்கித் தயங்கி நின்றிருந்தேன். அதற்குள் இவர்கள் என்னைப்பிடித்து வந்து விட்டார்கள் என்று சொன்னான் ஒற்றன்
கிருஷ்ணதேவராயர் ஒற்றனை உற்றுப் பார்த்தார். இவன் சொல்வது உண்மையாக இருக்குமா? தெனாலிராமன் ஊருக்குச் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்துவிட்டாரா, எதற்கும் இவனைக் கேட்டுப் பார்த்தால் தெரியும் என்று கேட்க நினைத்தார்; திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். நீ வீட்டிற்குச் சென்று தெனாலிராமனிடம் நான் வருவதாக
சொல் என்று அனுப்பினார். ஒற்றன் மகிழ்ச்சியோடு தெனாலிராமன் வீட்டிற்குச் சென்றான். அங்கு கொலை ஆயுதங்களுடன் அரசனைக் கொல்லக் காத்திருந்தான்
கிருஷ்ணதேவராயர் தெனாலிராமன் வீட்டிற்குச் சென்றார். அவரை யாரும் வரவேற்க வரவில்லை. அரசருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தெனாலிராமன் வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டுத் தன்னை அவமானப்படுத்த நிலைக்கிறாரா என்று கோபத்துடன் வீட்டிற்குள் சென்றார்.
வீட்டில் யாரும் இல்லை. வீடு அமைதியாக இருந்தது. அரசர் சுற்றும் முற்றும் பார்த்தார். தன்னை அழைக்க ஆள். கூட இல்லையே என்று யோசித்தார்.
வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தில் ஓர் உருவம் தூணில் மறைந்து கொண்டிருப்பதை அதன் நிழலால் தெரிந்து கொண்டார்.
அரசர் தன் உடைவாளில் கையை வைத்துப் பிடித்துக் கொண்டார். ஒற்றன் மெதுவாக அவரை நோக்கி நடந்து வந்தான்.
அரசர் நிழலைப் பார்த்துக் கொண்டே அதன் அருகில் சென்றார். அதன் அருகில் சென்றதும் தன் உடைவாளை எடுத்து வீசினார். ஒற்றன் தலை தரையில் வீழ்ந்தது. அவன் கையில் வைத்திருந்த கட்டாரியும் வாளும் கீழே விழுந்தன. ஒற்றன் செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் உள்ளத்தில் கொதித்தெழுந்தனர். தெனாலிராமனுக்குச் செய்தி எட்டியது.
அவரும் அவர் மனைவியும் ஊருக்குத் திரும்பினார்கள்.
அரசர்ஆணைப்படி தெனாலிராமனைக் கைது செய்தார்கள்.
அரச சபை கூடியது. தெனாலிராமன் பகை நாட்டு ஒற்றனுக்குத் தன் வீட்டில் இடம் கொடுத்தது தவறு. அவ்வீட்டில் அவரைக் கொல்ல முயன்றது தவறு. இக்குற்றங்களுக்காகத் தெனாலிராமனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சபையோர் தீர்ப்பளித்தார்கள்.
தெனாலிராமன் அரசரைப் பார்த்தார். 'அரசே! தாங்கள் என்னைக் கேட்டபடியே நான் சொன்னால் அதை தாங்கள் நிறைவேற்றுவீர்களா?' என்று கேட்டார்.
'நிச்சயம் நிறைவேற்றுவேன்' என்று சொன்னார். இவ்வார்த்தையிலிருந்து மாறமாட்டீர்களே என்று தெனாலிராமன் கேட்டார்.
'நான் அரசன் இந்தச் சபையோர் அறிய சொல்கிறேன். நான் சொன்ன சொல்லை மாற்றமாட்டேன்' என்று கோபமாகச் சொன்னார்.
`நன்று அரசே! மீண்டும் ஒரு முறை என்னைக் கேட்ட கேள்வியைக் கேளுங்கள்' என்று கேட்டார்.
'கேட்கிறேன் தெனாலிராமா? உனக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை (மரணத்தை) நீ எவ்வாறு நிறைவேற்றச் சொல்கிறாய்?' என்று அரசர் கேட்டார். அரசே இன்னும் தெளிவாகக் கேளுங்கள் சொல்கிறேன்'
என்று சொன்னார்.
அரசர் உடனே தெனாலிராமா நீ எப்படிச் சாக விரும்புகிறாய் உன் விருப்பத்தைச் சொல் அதை நிறைவேற்றுகிறேன்' என்று சொன்னார்.
அரசே இச்சபையோர் முன் என் சொல்லுகிறேன். நான் வயது முதிர்ந்து கிழவனாக வேண்டும். ஆசையைச் கோலூன்றி இந்தக் குவலயத்தில் நடக்க வேண்டும். என் நடை தடுமாறி, நினைவு இழந்த நிலையில் சாக விரும்புகிறேன். இதை நிறைவேற்றினால் போதும்' என்று சொன்னார்.
சபையில் கூடியிருந்த அனைவரும் தெனாலிராமன் தன் அறிவுத் திறமையால் மரண தண்டனையை மாற்றிக் கொண்டு வாழ்த்தினார்கள்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபலமான இடுகைகள்
ஞானிக்கு பாடம் சொன்ன இராமன்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக