முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

இடங்கழி நாயனார்

 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...

சிரிக்க வைப்பவன்! சிந்திக்க வைப்பான்!

பௌர்ணமி நாள் வானில் முழு நிலா வந்து கொண்டிருந்தது. அரண்மனை நிலா முற்றத்தில் அரசர், அமைச்சர், இராஜகுரு, தெனாலிராமன், படைத்தளபதிகள் ஆகியோர் கோல்குண்டா வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

#thenali raman story in tamil



தெனாலிராமன் இடை இடையே தன் நகைச்சுவை கவிதைகளைச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார். இதையறிந்த இராஜகுரு தெனாலிராமனை எப்படியும் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.


அரசே! தாங்களும் தளபதிகளும் அமைச்சரும் போரைப் பற்றிப் பேசுகிறீர்கள். தெனாலிராமன் ஏதோ சிறுபிள்ளைப் போல் வேடிக்கை பேசி சிரிப்பை ஊட்டுகிறார் என்று சொன்னார்.


இராஜகுரு சொன்னதைக் கேட்ட் அரசர் தெனாலி ராமனைப் பார்த்தார். தெனாலிராமன் அப்பொழுதும் ஒரு நகைச்சுவை கவிதையைச் சொல்லிச் சிரிக்க வைத்தார். அதைப் பார்த்த அரசர் தெனாலிராமனுக்குச் சிரிக்க வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இவர் ஓர் அப்பாவி விகடகவி' என்று சொன்னார்.


அரசர் சொன்னதைக் கேட்ட தெனாவிராமன் மனம் வேதனைப்பட்டது. 'அரசே! எனக்குச் சிரிக்க வைக்க மட்டுமே தெரியும் என்று நினைப்பது தவறு. சொன்னதைச் செய்யவும் தெரியும். சிந்திக்காதவரை சிந்திக்க வைக்கவும் தெரியும் என்று சொன்னார்.


அரசர் சொன்னதைக் கேட்டதும் அரசர் திகைத்துப் பார்த்தார்.


அரசே ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள். நீங்கள் அன்பும் பாசமும் கொண்ட ஒருவரின் கால் செருப்பால் உங்கள் முகத்தில் அடிக்கச் சொல்கிறேன்' என்று தெனாலிராமன் சொன்னார்.


நிலா முற்றத்தில் கூடியிருந்த அனைவரும் தெனாலிராமன் சொன்னதைக் கேட்டுத் திகைத்தார்கள். அரசர் தெனாலி ராமனுக்கு என்ன தண்டனை வழங்கப் போகிறாரோ என்று பயந்து நடுங்கினார்கள்.


'தெனாலிராமா! யாரிடம் பேசுகிறாய் என்று யோசித்துப் பேசு என்று இராஜகுரு கோபமாகக் கேட்டார். 'இராஜகுருவே! நான் நன்றாக யோசித்துத்தான் பேசுகிறேன்.

வேண்டுமானால் இதை என்னால் செய்ய முடியாது என்று சொல்லச் சொல்லுங்கள்' என்று சொன்னார்.


தெனாலிராமன் வீரமாகப் பேசியதைக் கேட்ட இராஜகுரு பதில் பேசாமல் அரசரைப் பார்த்தார்.


தெனாலிராமா நீ சொன்னதை உன்னால் செய்து காட்ட


முடியுமா?' என்று அரசர் சேட்டார்.


'நான் செய்து காட்டவில்லை என்றால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொன்னார்.


'நீ சொன்னதைச் செய்வதற்கு எவ்வளவு காலம் ஆகும்?" என்று அரசர் கேட்டார்.


'நான் சொன்னதைச் செய்வதற்கு ஐந்தாறு மாதங்களே ஆகும். அதற்குள் நான் செய்து முடிக்கவில்லை என்றால் நீங்கள் எனக்குத் தண்டனை வழங்கலாம்' என்று சொன்னார்.


அரசரும் ஒப்புக் கொண்டார்.


கிருஷ்ணதேவராயர் மலைநாட்டு மன்னரின் மகளைக் காதலிப்பது தெனாலிராமனுக்குத் தெரியும். மன்னருக்காகப் பலமுறை மலைநாட்டுக்குத் தூது சென்றிருக்கிறார்.


ஒருநாள் அரசர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். காவலாளிகள் தெனாலிராமன் வீட்டிற்குச் சென்று அழைத்தார்கள். தெனாவிராமன் அரசரைக் காண வந்தார்.


'தெனாலிராமரே! மலைநாட்டுக்குச் சென்று நான் சொன்னபடி செய்து முடித்து வர வேண்டும்' என்று சொன்னார்.


அரசர் சொன்ன கட்டளைப்படி தெனாலிராமன் மலைநாட்டுக்குச் சென்றார். அந்நாட்டு மன்னரின் மகளைக் கிருஷ்ணதேவராயருக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மலைநாட்டு மன்னன் தெனாலிராமன் சொன்னதற்கு இணங்கினார்.

மலைநாட்டு மன்னா! நான் சொல்லுகின்றபடி உன் மகளை ஒரு காரியம் செய்யச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்.


தெனாலிராமரே! எனக்கு இவ்வளவு உதவிகளைச் செய்யும் தங்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன், சொல்லுங்கள்" என்று கேட்டார்.


உங்கள் மகளுக்கும் கிருஷ்ணதேவராபருக்கும் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்குச் சென்றதும் மப்ைபெண் தன் காலில் அணிந்துள்ள பட்டுச் செருப்பைக் கழற்றி மணமகன் முகத்தில் அடிக்க வேண்டும்' என்று தெனாலிராமன் சொன்னார்.


தெனாலிராமன் சொன்னதைக் கேட்டதும் மலை நாட்டு மன்னன் திடுக்கிட்டான் 'கவிஞரே! இது என்ன வியரீத யோசனை? என் மகள் அப்படிச் செய்ததும் மன்னர் கோபித்து என் மகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?' என்று கேட்டார்.


அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் மகள் செயலுக்காக மன்னர் கோபப்படவும் மாட்டார். உங்கள் மகளை வெறுக்கவும் மாட்டார். இப்படி நடக்காமலிருப்பதற்கு நான் பொறுப்பு முதலில் நான் சொன்னபடி செய்யச் சொல்கிறீர்களா? என்று கேட்டார்.


எப்படித் தன் கணவன் முகத்தில் கால் செருப்பைக் கழற்றி அடிப்பது? யாராவது எதாவது கேட்டால் என்ன சொல்வது? என்று மலைநாட்டு மன்னன் கேட்டார்.


அதற்காகவா கவலைப்படுகிறீர்கள். இது எங்கள்


மலைநாட்டு மணப்பெண் வழக்கம் என்று சொல்லுங்கள். இதை


அரசரிடம் நானே முதலில் சொல்லிவிடுகிறேன் போதுமா?' என்று


கேட்டார். 'போதும் ஆனால் எந்த விபரீதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.


'அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று தெனாலிராமன் சொன்னார்.

மலைநாட்டிலிருந்து தெனாலிராமன் விஜயநகரம் வந்தார். அரசரிடம் திருமணத்தைப் பற்றி சொன்னார். திருமணம் நடக்க வேண்டிய நாளை குறித்து வந்ததையும் சொன்னார்.


தெனாலிராமன் சொன்ன செய்தியை அரசர் கேட்டு ஆனந்தப்பட்டார். தெனாலிராமனைக் கட்டித் தழுவினார்.


'அரசே ஆனால் ஒன்று என பேச்சை முடிக்காமல் இழுத்தார்.


என்ன தெனாலிராமரே! சொல்லுங்கள்' என்று கேட்டார்.


மலை நாட்டு மக்களிடம் ஒரு வழக்கம் இருக்கிறதாம். அந்த வழக்கத்திற்குத் தாங்கள் ஒப்புக் கொண்டால் திருமணம் நடக்கும். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் திருமணம் நடக்காது என்று சொன்னார்கள். நான் உங்கள் நாட்டு வழக்கத்தை அரசர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்று சொன்னேன். பிறகுதான் அவர்கள் திருமண நாளை ஒப்புக்கொண்டார்கள்' என்று தெனாலிராமன் சொன்னார்.


அது என்ன வழக்கம் என்று தெரிந்து கொண்டீர்களா?' என்று கேட்டார்.


மணமகளுக்கும் மணமகனுக்கும் நடக்கும் ஆனந்த விளையாட்டு என்று தெனாலிராமன் சொன்னார்.


கிருஷ்ணதேவராயருக்கும் மலைநாட்டு மன்னன்


மகளுக்கும் திருமணம் நடந்தது. மணப்பெண் மணமகன் வீட்டிற்குள் நுழைந்ததும் தன் காலில் அணிந்திருந்த பட்டுச் செருப்பைக் கழற்றி கணவன் முகத்தில் அடித்தாள். அரசே இதுதான் மலைநாட்டு மணப்பெண்கள் தங்கள்


கணவருக்கு முதல்நாள் விளையாட்டாக அம்மக்கள் வழக்கமாகக் கொள்கிறார்கள்" என்று சொன்னார். தெனாலிராமா! அன்று நீ சொன்னதை இன்று நீ செயலில் ' செய்து காட்டிவிட்டாய். அதுமட்டுமல்ல சிரிக்க வைத்த நீ என்னைச் சிந்திக்கவும் வைத்துவிட்டாய்' என்று அரசர் சொன்னார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்