முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

இடங்கழி நாயனார்

 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...

தெனாலிராமன் வளர்த்த குதிரை

 #thenali raman story in tamil

கிருஷ்ணதேவராயர் பீஜபூர் சுல்தானை வென்றபின் அந்நாட்டிலிருந்த தளபதியைக் கைது செய்தார். அவரை விஜயநகரத்திற்கு அழைத்து வந்தார்.


தளபதி குதிரைப் படையைச் சீர்படுத்த வேண்டும் என்று அரசரிடம் சொன்னான். 'படையில் உள்ள குதிரைகள் குறைவாக உள்ளன. நல்ல குதிரைகளை வளர்க்க வேண்டும். அவைகளை குதிரைப் படையில் சேர்க்க வேண்டும்' என்று சொன்னார்.



அரசர் தளபதி சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார். நல்ல குதிரைக் குட்டிகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கினார். அக்குதிரைக் குட்டிகளை முக்கிய பிரமுகர்களுக்கு வளர்க்கக் கொடுத்தார்.


தெனாலிராமனுக்கும் அரசர் ஒரு குதிரையை கொடுத்து வளர்க்கச் சொன்னார். தெனாலிராமன் குதிரைக் குட்டியை வாங்கிக் கொண்டார்.

அரசர் மதிகெட்ட தளபதியின் பேச்சைக் கேட்டுக் குதிரைக் குட்டிகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இதை வளர்க்கும் காலம் இவைகளை அரசர் நினைத்துப் பார்க்கவில்லை. அவருக்கு எப்படி இதைச் சொல்வது என்று யோசித்தார்.


தன்னிடம் கொடுக்கப்பட்ட குதிரைக் குட்டியை வளர்ப்பதற்கு ஒரு கல்லறைக் கட்டினார். அக்கல்லறைக்குள் குதிரையை விட்டார்.


குதிரைக்கு புல் கொடுக்க ஒரு சிறு துவாரம் செய்தார். அதன் வழியாக குதிரைக் குட்டிக்கு தினமும் புல் கொடுத்து வந்தார்.


குதிரைக்குச் சரியான உணவு கிடைக்கவில்லை. அதனால் உடல் மெலிந்தது.


அரசர் தளபதியை அழைத்துக் கொண்டு குதிரைகளை வளர்க்கும் ஒவ்வொருவர் இடத்திற்கும் சென்றார். பலர் தங்களிடம் கொடுத்த குதிரைக் குட்டிகளை கொழு கொழு வென்று வளர்த்திருந்தார்கள். அவைகளைப் பார்த்து அரசர் மகிழ்ச்சி அடைந்தார்.


கடைசியாக தெனாலிராமன் வீட்டிற்கு வந்தார். தெனாலிராமன் அவர்களை அன்புடன் வரவேற்றார். அரசர் குதிரையைப் பார்க்க விரும்பினார். தெனாலிராமர்! நீ வளர்க்கும் குதிரையைப் பார்க்க விரும்புகிறேன். எங்கே இருக்கிறது குதிரை?" என்று கேட்டார்.


'அரசே! குதிரை அடக்க முடியாமல் ஆவேசமாகப் பாய்கிறது. அதைப் பார்க்க தாங்கள் வர வேண்டாம். தளபதியை அனுப்புங்கள். அவர் வந்து பார்க்கட்டும்' என்று தெனாலிராமன் சொன்னார்.


அரசர் அதற்கு சம்மதித்துத் தளபதியை ' தெனாலி ராமனுடன் அனுப்பினார்.


தளபதி தெனாவிராமனுடன் மகிழ்ச்சியாகச் சென்றார்.

தெனாலிராமன் குதிரை இருக்கும் இடத்திற்குச் சென்றதும், 'தளபதி! இந்தக் கல்லறைக்குள் குதிரை இருக்கிறது. நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னான்.


தெனாலிராமன் காண்பித்த கல்லறையைத் தளபதி பார்த்தார். அதில் எப்படிக் குதிரையை வளர்க்க முடியும் என்று யோசித்தார்.


தளபதி! என்ன யோசிக்கிறீர்கள்? இதில் குதிரை இருக்கிறதா? இல்லையா? என்று யோசிக்கிறீர்களா?” என்று கேட்டார்.


ஆமாம். இதற்குள் எப்படிக் குதிரையை வளர்க்க முடியும்?' என்று தளபதி கேட்டார்.


'தளபதி! நான் வளர்க்கும் குதிரையை அடக்க முடியவில்லை. அதனால் ஒரு கல்லறையைக் கட்டினேன், அதற்குள் விட்டு குதிரையை வளர்த்து வருகிறேன். நீங்கள் வேண்டுமானால் குதிரையைப் பாருங்கள்' என்று குதிரைக்குப் புல் கொடுக்கும் துவாரத்தை தெனாலிராமன் காட்டினார்.


தெனாலிராமன் காட்டிய துவாரத்தின் வழியாகத் தளபதி குதிரையைப் பார்த்தார்.


தளபதிக்குத் தாடி நீண்டு வளர்ந்திருந்தது. அதனால் முகத்தைத் துவாரத்தின் வழியாக வைத்துக் குதிரையைப் பார்க்க முடியவில்லை தன் தாடியைத் துவாரத்திற்குள் நுழைத்தார். பிறகு துவாரத்தின் வழியாகக் குதிரையைப் பார்த்தார்.


குதிரை தாடியைப் பார்த்ததும் தனக்குப் புல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தது. அதைத் தளபதி பார்த்ததும் குதிரை ஏன் இப்படி ஓடி வருகிறது? தெனாலிராமன். சொன்னது போல் இது அடங்காத குதிரையா? என்று யோசிந்தான்,


குதிரை ஓடி வந்ததும் துவாரத்தின் வழியாகத் தொங்கின.

தளபதியின் தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டு இழுத்தது. தளபதி 'தாடி! தாடி!' என்று கத்தினார்.


தெனாலிராமன் ‘குதிரை! குதிரை!!" என்று கத்தினார்.


இருவர் கூச்சலைக் கேட்டு அரசர் அங்கு ஓடி வந்தார். தளபதியின் தாடியை குதிரை விடவில்லை. அரசர் கல்லறையை இடிக்க உத்தரவிட்டார். கல்லறையை உடைத்தார்கள்.


குதிரை மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்தது. அரசருக்குக் குதிரையைப் பார்த்ததும் கோபம் வந்தது. தெனாலிராமா எல்லோரும் குதிரையை எப்படி வளர்த்திருக்கிறார்கள். நீ இப்படித்தான் குதிரையை வளர்க்க வேண்டுமா?' என்று கேட்டார்.


'அரசே! இவர்கள் தங்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று தங்கள் பணத்தைச் செலவு செய்து குதிரைகளை அப்படி வளர்த்தார்கள். நான் குதிரையை வளர்த்துப் படையில் சேர்ப்பது கடினம் என்பதை உணர்த்த குதிரையை இப்படி வளர்த்தேன். அரசே! சற்று சிந்தித்துப் பாருங்கள். தளபதி சொன்னது போல் குதிரையை வளர்த்துப் படையில் சேர்ப்பது நல்லதா? வளர்ந்த குதிரைகளை வாங்கிப் படையில் சேர்ப்பது நல்லதா? எது சிறந்தது? என்று கேட்டார்.


அரசருக்கு அப்பொழுதுதான் உண்மை புரிந்தது. பணமும் காலமும் வீணானது தெரிந்தது. தெனாலிராமா! நீ சொன்ன உண்மை புரிந்தது' என்று சொல்லிவிட்டு சென்றார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்