முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

இடங்கழி நாயனார்

 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...

விக்கிரமன் - வேதாளம்

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கி செல்கையில் அதனுள்ளி ருந்த வேதாளம் எள்ளி நகைத்து மன்னனே! இந்த பயங்கர நடு நிசியில் நீ முடிக்க நினைத்த வேலை உன் சக்திக்கு உட்பட்டதா என்று நினைத்துப் பார்த்தாயா? அப்படி இருந்தால்தான் உன்னால் நீ நினைத்த வேலையைச் செய்ய முடியும். இல்லாவிட்டால் உனக்கு பெருத்த அவமானமே ஏற்படும். ஒருவன் தன் சக்தியையும் அந்தஸ் தையும் உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்பட்டால் அவன் செய்யும் வேலை வெற்றிகரமாக முடியும். இதன் தொடர்பாக சோனாவதி என்பவளின் கதையைக் கூறுகிறேன்.

கவனமாகக் கேள்" என்று கூறிக் கதையை ஆரம்பித்தது. இந்திரகிரி என்ற நாட்டில் ஈஸ்



வரய்யா என்ற குடியானவன் இருந் தான். அவனது மனைவி பரிமளா. கல்யாணமாகி பல வருடங்களுக் குப் பிறகே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் அழகை அதைப் பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். அதன் மூக்கும் முழியும் தங்கம் போன்ற உடல் நிறமும் அவளது அழகை உயர்த் திக் காட்டியது. இவ்வளவு அழகிய குழந்தைக்கு ஈஸ்வரய்யா சோனா வதி என்று பெயர் வைத்தான்.


சோனாவதி வளர வளர அவளது அழகும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அவளைப் பார்த்தஅவளது உற்றார், உறவினர், தோழி கள் யாவரும் "நீராஜகுமாரி போலி ருக்கிறாய். உன்னை யாராவது ஒரு ராஜகுமாரன்தான் வந்து கொத்திக் கொண்டு போகப் போகிறான்" என்று கூறலானார்கள்.


இப்படி எல்லோரும் சொல்வ தைக் கேட்கக் கேட்க சோனாவதி யின் மனதிலும் தன்னை ஒரு ராஜ குமாரன்தான் மணக்க வேண் டும் என்ற எண்ணம் நிலைக்கலா யிற்று


அதே ஊரிலிருந்த ஈஸ்வரய்யா வின் நண்பனான சிவய்யா அவனி டம் “உள் மகள் சோனாவை என் மகன் லிங்கய்யனுக்கு மணம் செய்து வைக்கிறாயா?" என்று கேட்டு வந் தான். ஈஸ்வரய்யாவும் "பார்க்க லாம்" என்று கூறி வந்தா


ஒருநாள் லிங்கய்யனே சோனா வதியைச் சந்தித்து "சோனா! உன்னை நான் மிகவும் விரும்பு கிறேன். என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?" என்று கேட்டான். லிங்கய்யனும் இளை ஞனே. அழகாகவும் இருந்தான். ஆனால் சோனாதிவதியோ "உன்னை மணந்து கொள்ள எனக்குக் கொஞ் சமும் விருப்பம் இல்லை" என்று வெடுக்கென்று கூறினாள்


அதைக்கேட்ட லிங்கய்யா மனம் உடைந்து போய் "இதோ பார் சோனா! எனக்கு கல்யாணம் நட' கும் என்றால் அது உன்னோடுதான்.

தான். வேறு எந்தப் பெண்ணையும் மணக்க மாட்டேன்" என்றான். சோனாவதி அதற்கு பதில் எது வும் கூறவில்லை.


சோனாவதி தான் ஒரு ராஜ குமாரனை மணக்கப் போவதால் ராஜ வம்சத்து நடை உடை, பாவனை களை அறிந்து கொள்ள விரும்பி னாள். அதனால் இந்திரபுர ராணி யின் அந்தப்புரத்தில் வேலை செய்யும் தன் தோழி ஒருத்தியின் உதவியால் ராணியின் அந்தப்புரத் தில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் உத்தியோகமும் பெற்று விட்டாள்.


ஒருமுறை ஒரு ஓவியன் ராணி யைக் கண்டு 'அரசியாரே! தங் களுக்குச் சமர்ப்பிக்க ஒரு அழகிய ஓவியம் வரைந்து கொண்டு வந் திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங் கள்'' என்று கூறித் தான் வரைந்த ஓவியத்தை கொடுத்தான். அங்கே நின்ற சோனாவதி அந்த ஓவியத்தை வாங்கி ராணியிடம் கொடுத்தாள்.


அதில் சூரியன் மறையும் காட்சி அற்புதமாக வரையப்பட்டிருந்தது. அதன் வண்ண அமைப்புகளைப் பாராட்டி ராணி அந்த ஓவியனுக்கு ஆயிரம் வராகன்கள் கொடுத்து அனுப்பினாள். பிறகு அவள் சோனாவதியிடம் " ஓவியம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள்.


சோனாவதியும் "நாம் தினமும் பார்க்கும் சூர்ய அஸ்தமனக் காட்சி தானே இது. இதில் குறிப்பிடத்தக்க தாக எதுவும் இல்லையே. இதற்குப் போய் ஆயிரம் வராகன்கள் கொடுத் தது மிக அதிகம் ” என்றாள். அதைக் கேட்ட ராணி சிரித்து "சோனா! கடவுள் உனக்கு என்னவோ அழ கைக் கொடுத்து விட்டார். ஆனால் அழகிய கலைப் பொருள்களை ரசிக்கும்படிச் செய்ய உனக்கு அறிவை கொடுக்கவில்லை. அது மட்டும் அல்ல. நான் கொடுத்த பரிசுத்தொகை என் அந்தஸ்திற் குத் தக்கவாறு தான் என்பதையும் நீ உணரவில்லை" என்றாள்.


ஒரு நாள் ராஜாவும் ராணியும். உட்கார்ந்து பேசிக் கொண்டிருக் கும் போது சோனாவதி வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு ஒற்றன் வந்து ''அரசே! நம் அண்டை நாட்டு மன்னன் நம் நாட்டின் மீது படை எடுத்து வந்து கொண்டிருக்கிறான்' எனக்கூறிவிட்டுப் போனான்.


அதைக் கேட்ட சோனாவதி பயந்து நடுங்கித் தன் கையிலி ருந்த வெண்சாமரத்தைத் 'தொப்' பென்று கீழே போட்டாள். ராணி ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள், ராஜாவோ "இந்தப் படைஎடுப்பு நான் எதிர்பார்த்ததுதான். எதிரியை எதிர்க்க நம் படைகள் நம் எல்லை யில் தயாராக உள்ளன" என்று கூறி விட்டு சோனாவதியைப் பார்த்து "படை எடுப்பு என்ற சொல்லை கேட்டதும் பயந்து விட்டாயே அரண்மனையில் வேலை செய்யும்நீயே இப்படி பயந்தால் மற்றவர் கள் நிலை என்ன? இப்படி எல்லாம் கேட்கும் போது தைரியமாக இருக்க நீ பழகிக் கொள்ள வேண்டும்". என்றான்.


ஒரு நாள் ராணி காட்டிற்கு உல்லாச பயணமாகக் கிளம்பினாள். அவளோடுப் பெண்களும் கிளம் பினார்கள். ஆனால் சோனாவதி மட்டும் தனக்கு உடம்பு சரியில்லை எனக்கூறிப் போகவில்லை. உண் மையில் அவள் உடல்நலம் ஒன்றும் கெட்டிருக்கவில்லை. அவள் ராணி இல்லாத போது ராணியின் புடவை யைக் கட்டிக் கொண்டும் நகை களைப் போட்டுக் கொண்டும் தன் அழகைக் கண்ணாடியில் பார்க்க விரும்பினாள். அதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கவே, அவள் ராணி யோடு செல்லவில்லை


ராணி அரண்மனையை விட்டுப் போனதுமே சோனாவதி ராணியின் அறைக்குள் சென்று ராணியின் விலையுயர்ந்த புடவையை எடுத்து உடுத்துக் கொண்டும் அவளது நகை களை அணிந்து கொண்டும் நிலைக் கண்ணாடி. முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தா


அப்போது திடீரென ஒரு இளை ஞன் அங்கு வந்தான், அவன் சோனா வதியின் அழகைப் பார்த்துவிட்டு “நீ யார்? எந்த தேசத்து ராஜ 'குமாரி? " என்று கேட்டான். சோனா வதியும் மிடுக்காக "நான் மரகதபுரி இளவரசி மாலினி, நீங்கள் யாரோ?" என்று கேட்டாள்.


அவனும் “ நான் இந்நாட்டு இள வரசன். குருகுலத்தில் என் படிப்பை முடித்துக் கொண்டு இன்றுதான் வந்தேன். உன் அழகு என்னை மயக்கி விட்டது. நான் உன்னை மணந்து கொள்கிறேன். இதற்காக உன் பெற்றோரிடம் முறைப்படிப் பெண் கேட்கச் சொல்கிறேன்'' என்றான்


விஷயம் முற்றுவதற்கு முன் தடுக்க நினைத்து சோனாவதி "இள வரசே! என்னை மன்னித்து விடுங் கள் நான் அரசகுமாரி அல்ல. உண் மையில் இங்கு பணிபுரிபவள். ஏதோ விளையாட்டிற்கு தாங்கள் இன்னாரெனத் தெரிந்து கொள்ளா மல் பொய் சொல்லிவிட்டேன்" என்றாள் பயந்தவா


அதுகேட்டு இளவரசன் புன் னகை புரிந்து "பயப்படாதே. குப்பையில் கிடக்கும் மாணிக்கத் அதைக் கண்டால் அதை எடுத்து உரிய இடத்தில் பத்திரப்படுத்துவேனே யொழிய அதைக் காலால் எட்டி உதைத்து விட்டுப் போய்விட மாட்டேன். நீ ஒரு பணிப்பெண் ணான போதிலும் உன்னை நான் மணக்கத் தயார்" என்றான்


அப்போது சோனாவதி "இள வரசே! நான் ஒரு கேள்வி கேட் கட்டுமா? ஒரு வேளை நான் இந் தத் திருமணத்திற்கு இசையாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர் கள்? " என்று கேட்டாள். இளவரச னும் 'ஒரு பணிப் பெண்ணுக்கு ஒரு இளவரசனை மணக்கக் கசக் குமா? அப்படி ஒரு வேளை நீ மறுத் தால் உலகில் உன்னை விட அழ கான பெண் இல்லாமலா போய் விடுவாள்? அவளைக் கண்டுபிடித்து மணந்து கொள்வேன்" என்றான்.


அப்போது சோனாவதி "மன்னி யுங்கள் இளவரசே! என் திருமணம் என்றோ எனக்குப் பிடித்தமானவரு டன் ச்சயிக்கப்பட்டு விட்டது எனக்கூறி அரண்மனையை விட்டு வெளியேறித் தன் வீட்டை அடைத் தாள். பிறகு அவள் லிங்கய்யனை மணந்து கொண்டு சுகவாழ்வு வாழ்ந்தாள்.


வேதாளம் இக்கதையை கூறி 'மன்னனே! ஆரம்ப முதல் தன் அழகில் பெருமிதப்பட்டு தான் ஒரு ராஜகுமாரனையே மணக்க வேண் டும் என்று திடமாக எண்ணி வந்த சோனாவதி அத்தகைய வாய்ப்பு கிடைத்த போது அரசகுமாரனை மணக்காமல் ஏன் எளிய குடும் பத்து லிங்கைய்யனையே மணந்து கொண்டாள்? இக்கேள்விக்குத் தக்க விடை தெரிந்திருந்தும் நீ கூறா விட்டால் உன் தலை வெடித்துச் சுக்குநூறாகி விடும்" என்றது.


விக்கிரமனும் "சோனாவதி தான் ஒரு ராஜகுமாரனையே மணக்க வேண்டும் என் எண்ணி இருந்தாள். அதற்காக ராஜவம்ச நடை, உடை பாவனைகளைப் பற்றி அறிய அரண் மனைப் பணிப்பெண்ணாகச் சேர்ந் தாள். அவளையே மணக்க விரும் பிய விங்கைய்யாவின் வேண்டு தலுக்குச் சரியான பதிலும் கூற


வில்லை. அவளுக்கு ராஜகுமாரனை மணக்க வாய்ப்பும் கிட்டியது. ஆனால் சோனாவதி அவனிடம் கேட்ட கேள்விக்கு அவன் அளித்த பதிலே அவளது நீண்டகால எண் ணத்தைச் சட்டென மாற்றியது. அவளைவிட அழகி கிடைத்தால். அவளையே மணந்து கொள்வதாகச் கூறவே அவன் அதை அவளை மணந்து கொண்ட பிறகும் செய் வான் என்பது அவளுக்குத் தெளி வாகத் தெரிந்துவிட்டது. அதனால் ராஜகுமாரனை மணப்பதைவிடத் தன்னை மட்டும் விரும்பும் லிங் கைய்யனை மணப்பதே சரி என நினைத்தே ராஜகுமாரனை நிரா கரித்தாள்" என்றான்.


விக்கிரமனின் இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பி மீண்டும் முருங்கமரத்தில் ஏறிக்கொண்டது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்