முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

இடங்கழி நாயனார்

 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...

பானைத் தலையன்



அரச சபையில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் மனதில் கவலை வாட்டியது. அரசர் எதற்காகத் தெனாலிராமனுக்கு இப்படிப்பட்ட தண்டனை கொடுத்தார் என்று சிலர் கேட்டார்கள்.


'தெனாலிராமனுக்கு இப்படிப்பட்ட தண்டனையைக் கொடுப்பதை விட இந்நாட்டை விட்டு நாடு கடத்தியிருக்கலாம். அதைச் செய்தால் தெனாலிராமன் மனம் நிம்மதி அடைந்திருக்கும். ஆனால் அரசர் அப்படிச் செய்யவில்லை என்று சொன்னார் தளபதி.



'இந்த ஊரில் இருந்து வாழும் அவரை அரசர் முகத்தில் விழிக்கக்கூடாது என்று சொன்னால் இது என்ன தண்டனை? அரண்மனைக்கு வரக் கூடாது என்று சொல்லியிருந்தால் நல்ல தண்டனை என்று சொல்லலாம்" என்று சொன்னார் அறக்காவலர்.

'ஏதோ நடந்தது நடந்து விட்டது. அவர் கொடுத்த தண்டனையை நம்மால் எப்படி மாற்ற முடியும்? என்று அனைவரும் பேசிக் கொண்டார்கள்.


இராஜகுரு அங்கு வந்தார். அனைவரையும் பார்த்தார். 'அரசர் தெனாலிராமனுக்கு கொடுத்த தண்டனை சரியான தண்டனை. இனிமேல் தெனாலிராமன் அரச சபைக்கு வந்து வீண். வம்புகள் செய்யமாட்டார்' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.


அனைவரும் இராஜகுருவைத் திரும்பிப் பார்த்தார்கள். ‘இந்த இராஜகுரு இருக்கிற வரைக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்' என்று சொன்னார் தளபதி.


தெனாலிராமன் அரசர் கொடுத்த தண்டனையை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தார். நாளைக்குக் கூடும் அரச சபைக்கு எப்படிச் செல்வது? என்று நினைத்தார்.


தெனாலிராமன் மனைவி தன் கணவரின் யோசனையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.


வீட்டில் இருந்த பானையைப் பார்த்தார். அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. உடனே பானையைக் கையில் எடுத்தார் அதைத் தன் தலையில் கவிழ்த்துக் கொண்டார். தெனாலிராமன் செயலைப் பார்த்ததும் அவர் மனைவிக்குச்


சிரிப்பு வந்தது. எதற்காக இவர் இப்படிச் செய்கிறார் என்று


முணுமுணுத்தாள். 'என்ன செய்கிறாய்? என் காதில் விழும்படிச் சொல்' என்று கேட்டார்.


பானையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டால் எப்படி காது கேட்கும்?' என்று கேட்டாள். தெனாலிராமன் தலையில் கவிழ்த்து இருந்த பானையை


எடுத்தார். 'என்ன சொல்கிறாய் சொல்' என்று கேட்டார்.


'அரசர் என்னை அவர் முகத்தில் விழிக்கக் கூடாது என்று தண்டனை கொடுத்திருக்கிறார். ஆனால் நாளைக்குச் சபைக்குச்செல்ல வேண்டும். அங்கு சென்றால் அவர் முகத்தில் விழிக்க வேண்டி வரும் அதற்காக இந்தப் பானையைத் தலையில் கவிழ்த்துக் கொள்ளலாமா? என்று பார்க்கிறேன்'' என்று சொன்னார்.


'உங்கள் 'யோசனை ஒன்றும் தவறாக இருக்காது. நீங்கள் நினைத்தபடி செய்யுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொன்னாள்


மனைவி சொன்னதைக் கேட்டதும் தெனாலிராமன் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. நாளைக்குச் சபைக்குச் செல்லும் போது பானையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு செல்ல வேண்டும். என்று முடிவு செய்தா


மறுநாள் தன் வேலைகளைச் சுறுசுறுப்பாகத் தெனாலிராமன் செய்து கொண்டிருந்தார். எல்லா வேலைகளையும் செய்து முடித்தார். அரண்மனைக்குப் புறப்படும் போது பானையைக் கையில் எடுத்தார். தன் தலையில் போட்டு மனைவியிடம் காட்டினார்


'சரியாக இருக்கிறது. எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னா


தெனாலிராமன் மனைலியின் வார்த்தையைக் கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். பாளையை எடுத்துக் கொண்டு அரண்மனை நோக்கி நடந்தார்


தெருவில் நடப்போர் அனைவரும் தெனாலிராமனைப் பார்த்தா ள். தெனாலிராமன் எதற்காக அரண்மனைக்குப் பானையை எடுத்துச் செல்கிறார் என்று யோசித்தார்க


தெனாலிராமன் அரண்மனையை நெருங்கியதும் பானையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டார். அரண்மனைக்குள் நுழைத்தார். அரண்மனைக் காவலாளிகள் ‘இந்தப் பானைத் தலைபன் யார்? இவன் எங்கே செல்கிறான்?" என்று கேட்டனர்


பானைத் தலையன் அரசரைப் பார்க்கச் செல்வதாகசொன்னான்.


அவன் சொன்னதைக் கேட்டு காவலர்க


ஆச்சரியப்பட்டார்கள்


அரண்மனையில் சபை கூடியது. சபையில் பானைத் தலையள் சென்று தன் இருக்கையில் உட்கார்ந்தான். அமைச்சர் தளபதி அனைவரும் பானைத் தலையன் யார் என்று தெரிந்து. கொண்டார்க


அரசர் சபைக்கு வந்தார். சபையிலுள்ள அனைவரும் எழுத்து நின்றார்கள்


அரசர் பானைத் தலையனைப் பார்த்தார். 'யார் இந்த பானைத் தலையன்?' என்று கேட்டார். 'அரசே! தங்களால் தண்டனை வழங்கப்ப


தெனாலிராமன்' என்று பதில் சொன்னார்


'தெனாலிராமா! நீ ஏன் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டா


'அரசே! நீங்கள் என்னை உங்கள் முகத்தில் விழிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டீர்கள். நான் உங்களை இப்படிப் பார்ப்பதைவிட வேறு வழியில்லை' என்று சொன்னார்


'தெனாலிராம!' அந்தத் தண்டனை முடிந்துவிட்டது. நீ என்னைப்பார்க்கலாய்' என்று சொன்னா


தெனாலிராமன் தலையிலிருந்த பானையைக் கழற்றினார். 'அரசே!.' என்று பேச்சை நிறுத்தினார். "தெனாலிராமா! உன் புத்திக் கூர்லமயை பாராட்டுகிறே


என்று பாராட்டினார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்